மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் எல் முருகனுக்கு இடம் – வெளியான பெயர் பட்டியல்!

0
மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் எல் முருகனுக்கு இடம் - வெளியான பெயர் பட்டியல்!
மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் எல் முருகனுக்கு இடம் - வெளியான பெயர் பட்டியல்!
மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் எல் முருகனுக்கு இடம் – வெளியான பெயர் பட்டியல்!

மத்திய அரசு அறிவிப்பின் படி அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சராக பதவி ஏற்க உள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகன் இடம் பெற்றுள்ளார்.

மத்திய அமைச்சரவை:

2019 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக 2 வது முறை பதவி ஏற்ற பின்னர் மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றமும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளிவந்தது. அடுத்த ஆண்டு 7 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியீடு – கல்வி வாரியம்!

ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் 53 அமைச்சர்கள் உள்ளனர். தற்போது அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உயர் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் சதானந்த கவுடா, சந்தோஷ் கங்குவார் உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது புதிதாக பதவி ஏற்க உள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

மத்திய அமைச்சரவை பட்டியல்:

மத்திய அமைச்சரவையில் ஜோதிராதித்ய சிந்தியா, பசுபதி குமார் பராஸ், பூபேந்தர் யாதவ், அனுப்ரியா படேல், ஷோபா கரண்ட்லாஜே, மீனாட்சி லேக்கி, அஜய் பட், அனுராக் சிங் தாக்கூர், நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார், கிரண் ரிஜிஜு, கிஷண் ரெட்டி, அனுபமா தேவி, எல்.முருகன், அஷ்வினி வைஷ்ணவ், சாந்தனு தாக்குர், பிஸ்வேஸ்வார் துடு, கவுசல் கிஷோர், ஏ.நாராயணசாமி, அன்னபூர்ணா தேவி, பி.எல். வர்மா ஆகியோரும் மத்திய அமைச்சராக பதவியேற்கின்றனர். மேலும் இதில் 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள் அடங்குவார்கள்.

மத்திய அமைச்சரவை - பெயர் பட்டியல்
மத்திய அமைச்சரவை – பெயர் பட்டியல்
மத்திய அமைச்சரவை - பெயர் பட்டியல்
மத்திய அமைச்சரவை – பெயர் பட்டியல்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!