‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இணையும் புதிய பிரபலம் – இனி கதை வேற ட்ராக் தான்!

0
'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இணையும் புதிய பிரபலம் - இனி கதை வேற ட்ராக் தான்!
'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இணையும் புதிய பிரபலம் - இனி கதை வேற ட்ராக் தான்!
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இணையும் புதிய பிரபலம் – இனி கதை வேற ட்ராக் தான்!

விஜய் டிவியின் சீரியல்கள் மூலம் அதிக அளவில் பிரபலம் அடைந்தவர் ரேடியோ மிர்ச்சி செந்தில், தற்போது அவர் நடித்து வரும் சீரியலில் புதிய பிரபலம் ஒருவர் இணைய இருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதிய பிரபலம்:

ரேடியோ மிர்ச்சி செந்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரை உலகின் கதாநாயகனாக நிலைத்து நிற்கிறார். இதற்கு காரணமே அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் தான். அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து விடும். இதனால் அந்த பெயராலேயே தான் மக்கள் அதிக அளவில் இவரை அழைக்கின்றனர். தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கோலாகலமாக நடந்த கடைதிறப்பு விழா!

முன்னதாக கொரோனா கால ஊரடங்கிற்கு முன்னதாக வேறு கதையில் சென்று வந்த சீரியல், ஊரடங்கிற்கு பிறகு வேறு கதையாக மாற்றி விட்டனர். காரணம் கதையின் 2 கதாநாயகிகளும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். அந்த புதிய கதையிலும், 2 வேடத்தில் தான் செந்தில் நடித்து வருகிறார். அதில், இருவரும் அண்ணன், தம்பியாக இருந்த போதிலும், எதிரிகளை போல் நடந்து கொள்கின்றனர். அதில், மாயனுக்கு ஜோடியாக நடித்து வந்த ரக்ஷிதா சமீபத்தில் தான் சீரியலில் இருந்து விலகினார்.

கோபிக்கு விவாகரத்து கொடுத்த பாக்கியா, ராதிகாவுடன் திருமணம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!

இவர்க்கு பதிலாக அரண்மனை கிளி நாயகி மோனிகா நடித்து வருகிறார். மாறனுக்கு ஜோடி இதுவரை சீரியலில் இல்லை. அதற்காக பவித்ரா என்ற நடிகை மாறனுக்கு ஜோடியாக சீரியலில் சேர இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் இதுவரை ஒரே சண்டையாக போய்க் கொண்டிருந்த நிலையில், இனி ரொமான்ஸ் காட்சிகளை அதிக அளவில் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here