கோபிக்கு விவாகரத்து கொடுத்த பாக்கியா, ராதிகாவுடன் திருமணம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!

0
கோபிக்கு விவாகரத்து கொடுத்த பாக்கியா, ராதிகாவுடன் திருமணம் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!
கோபிக்கு விவாகரத்து கொடுத்த பாக்கியா, ராதிகாவுடன் திருமணம் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!
கோபிக்கு விவாகரத்து கொடுத்த பாக்கியா, ராதிகாவுடன் திருமணம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பல்வேறு கதைக்களத்துடன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் வாரம் கோபி ராதிகா திருமணம் நடக்க உள்ள எபிசோடுகள் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

கோபி ராதிகா திருமணம்:

விஜய் டிவியில் பல்வேறு கதைக்களத்தில் சீரியல்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் ஆகும். இது பெங்காலி சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் ஒரு குடும்ப தலைவியின் உணர்வுகளை கூறும் விதமாக கதை இருப்பதால், இது வீட்டில் இருக்கும் பெண்களை மட்டுமல்லாமல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வரம் ஒளிபரப்ப உள்ள எபிசோடில் பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கோபி கையெழுத்து வாங்கி விடுகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரனின் நெகிழ்ச்சியான பதிவு – உருகும் ரசிகர்கள்!

இதனால் இந்த வாரம் முழுவதும் அதிரடி திருப்பத்தை தரப்போகிறது. கோபியின் முன்னாள் காதலி ராதிகாவுக்கு ஏற்கனவே விவாகரத்து கிடைத்துவிட்டது. இந்த நிலையில் ராதிகாவின் அம்மா, கோபியை ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்றது, அந்த வகையில் கோபி , பாக்கியாவை விவாகரத்து செய்தால் தான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடியும் என ராதிகாவின் அம்மாவிடம் கூறினார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு ஏற்பட்ட பரிதாபம் – குவியும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இதன் காரணமாக,ராதிகாவுடன் வக்கீலை பார்க்க சென்ற கோபி தன்னுடைய மனைவி தனக்கு விவாகரத்து கொடுத்து விடுவார் என சொன்னதை தொடர்ந்து, அதில் கையெழுத்து வாங்கிட்டு வாங்க என ஒரு பேப்பரை கொடுத்து அனுப்புகிறார் வக்கீல். இருப்பினும் பாக்கியாவிடம் இதுவரைக்கும் கோபி இதைப் பற்றி பேசவில்லை. ஒருபக்கம் ராதிகாவும் பேப்பரில் கையெழுத்து வாங்கும் படி கோபியிடம் அடிக்கடி கேட்கிறார். இப்படி இருக்கையில்,ராதிகாவின் வற்புறுத்தலால் கோபி, டைவர்ஸ் பேப்பரில் பாக்கியாவிடம் கையெழுத்து வாங்குகிறார். ஆனால் பாக்கியா இது என்ன பேப்பர் என்று கோடா கேட்காமல் கோபி சொன்ன ஒரே வார்த்தைக்கு டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுகிறார் பாக்கியா. இது குறித்து ப்ரோமோ வெளியாகிய நிலையில் வரும் எபிசோடுகள் அதிரடி திருப்பத்துடன் இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here