ஹோட்டல் நிர்வாக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு
ஹோட்டல் நிர்வாக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஹோட்டல் நிர்வாக படிப்புகளில் சேர NHC என்னும் தேசிய நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே மேற்கொண்டு பாடங்களில் சேர இயலும்.
அந்த தேர்வானது முன்னதாக ஏப்ரல் 25 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வானது ஊரடங்கினால் தள்ளிபோடப்பட்டது. அதன் பிறகு யுஜிசி நிர்வாகிகள் ஒன்று நடத்தப்பட்டு இறுதியில் அந்த தேர்வுகள் யாவும் வரும் ஜூன் 22 அன்று நடத்தப்படும் என்றும் தேர்விற்கு மாணவர்கள் தயாராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லுரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
மேலும் இதற்கான ஹால் டிக்கெட்கள் தேர்விற்கு 15 நாட்களுக்கு முன்னதாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது பல்வேறு காரணங்களாலும், தேர்வு நடத்தப்படுவதில் பல்வேறு நிகழ்கால சிக்கல்கள் இருப்பதனாலும் தேர்வினை தற்பொழுது நடத்த இயலாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் நடைபெற இருந்த அந்த தேர்வானது இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அவை வெளியான பின் எங்கள் வலைத்தளம் வாயிலாக அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |