இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு!

0
இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு!
இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு!
இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு!

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் 60 இடங்களில் வெற்றி பெற்று புதிய ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் நஃப்தலி பென்னட் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர்:

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளது. இதுவரை 12 ஆண்டுகளாக பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் நாட்டின் பிரதமராக பதவியில் இருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் உள்ள 120 இடங்களில் 60 இடங்களில் 8 எதிர்க்கட்சிகள் இணைந்து வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் 100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை – வாகன ஓட்டிகள் வேதனை!

பதவியில் இருந்த பெஞ்சமின் நெதன்யாகு கட்சிக்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதில், ஒரு எம்.பி வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றிக்கு பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆதரவு எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் முழக்கம் இட்டனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

முதல் பிரதமராக யாமினா கட்சியின் தலைவர் நஃப்தலி பென்னட் இஸ்ரேலின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் பதியேற்பு விழா நடைபெற்றுள்ளது. முதல் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே இவர் பிரதமராக பதவி வகிப்பார். இவரின் அமைச்சரவையில் 9 பெண்களுடன் கூடிய 27 அமைச்சர்கள் உள்ளனர். இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!