“நம்ம கோவை” இணையதளம் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு!
கோவை மாவட்டத்தில் நம்ம கோவை இணையதள சேவையை ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்ம கோவை:
தமிழகத்தில் தொழில்துறையில் படிப்படியாக வளர்ந்து வரும் மாவட்டமான கோவையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு திட்டங்கள் அமைக்கப்பட்டு அரசு உதவி வருகிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள ஏழை மக்கள் மற்றும் மாணவர்களுக்கு, நம்ம கோவை குழு என்ற தொண்டு நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினி பயிற்சி – அப்பாவு அதிரடி!
இந்த குழுவில் உள்ள தன்னார்வலர்கள் பல்வேறு சமூக சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து நம்ம கோவை அமைப்பும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, நம்ம கோவை என்ற இணையதள பக்கத்தை தொடங்கி உள்ளனர். இந்த இணைய பக்கத்தினை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவரது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். அதன்பின் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன்களையும் ஆட்சியர் வழங்கினார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, பல்வேறு காரணங்களால் அரசு திட்டங்கள் பயனாளிகளை சென்றடைய கால தாமதம் ஏற்படலாம். இந்த இணையதளம் நடைமுறை சிக்கல்களை சரி செய்து உரிய மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்க்க வழிவகுக்கும் என்றும் கூறினார். கோவை மாவட்டத்தில் உள்ள நல்ல உள்ளங்கள் இந்த முயற்சியை தொடங்கி உள்ளதாகவும், கடந்த 2 மாதங்களாக பலமுறை ஆலோசனை நடத்திய பிறகு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டது என அவர் கூறினார். கோவையில் இந்த முயற்சி சிறப்பாக இயங்கும் நிலையில் பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.