கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை – இன்ஸ்டா பதிவு!

0
கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் நடிகை - இன்ஸ்டா பதிவு!
கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் நடிகை - இன்ஸ்டா பதிவு!
கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை – இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை வனிதா ஹரிஹரன். அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை வனிதா ஹரிஹரன்:

சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் கர்ப்பமாக இருப்பதும் அதை போட்டோஷூட்கள் மூலமாக தெரிவிப்பதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த காலத்தில் குழந்தை பெற்றுக் கொண்டால் சினிமாவில் நடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் கால மாற்றத்தினால் அந்த நிலை மாறி உள்ளது. குழந்தை பெற்று ஒரு மாதத்தில் நடிக்க வந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை வனிதா ஹரிஹரன்.

கண்ணனிற்கு சாப்பாடு கொடுத்து விடும் தனம், ஏற்றுக் கொள்வாரா மூர்த்தி? அடுத்த வார எபிசோட்!

இந்த சீரியலில் ஹீரோவாக சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி சரவணன் நடிக்கிறார். 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. அதன் பின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. இதில் இரண்டு ஹீரோயின்களாக நடித்த ரக்சா, ரேஷ்மி என இருவருமே மாற்றப்பட்டிருந்தனர்.

சன் டிவி ‘சித்தி 2’ சீரியலில் அறிமுகமாகும் விஜய் டிவி நடிகை – வெளியான புகைப்படம்!

ஹீரோ மாயன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த செந்தில் மட்டும் தொடர்ந்தார். முதல் சீசனில் மாயனின் தங்கை ஆனந்தியாக நடித்தவர் சின்னத்திரை நடிகை வனிதா. இந்த சீரியலில் கதையின் திருப்பமே இவரால் தான் ஏற்படும். மாயனை பழிவாங்க, தேவியின் தம்பி ஆனந்தியை திருமணம் செய்து கொள்வார். இந்நிலையில் இந்த சீரியலுக்கு பின்பு வேறு எந்த சீரியலிலும் ஆனந்தியை பார்க்க முடியவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!