முகலாயரின் கீழ் இந்தியா

0

முகலாயரின் கீழ் இந்தியா

பொருளாதார, சமூக வாழ்க்கை:

முகலாயர் காலத்தில் நடைபெற்ற சமூக, பொருளாதார வளர்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. அக்காலத்தில், பல ஐரோப்பியர் பயணிகளும் வணிகர்களும் இந்தியாவிற்கு வந்தனர். இந்தியாவில் நிலவிய சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றி அவர்கள் ஏராளமான தகவல்களை விட்டுச் சென்றுள்ளனர். பொதுவாக, அவர்கள் இந்தியாவின் செல்வச் செழிப்பையும், செல்வந்தர்களின் ஆடம்பரமான வாழ்க்கையையும் விவரித்துள்ளனர். மறுபுறம், குடியானவர்கள், கைவினைஞர்கள் போன்ற சாதாரண மக்களின் வறுமையையும் அவர்கள் பட்ட துயரங்களையும் கூட எடுத்துக் கூறியுள்ளனர்.

முகலாய உயர்குடியினர்:

 • முகலாயர் காலத்தில் உயர்குடியினர் பல சலுகைகள் பெற்று வாழ்ந்த வர்க்கத்தினராவர். அவர்களின் பெரும்பாலோர் துருக்கியர் மற்றும் ஆப்கன்கள் போன்ற அயல் நாட்டினர். ஆனால், அக்காலம் முழுவதும் அவர்களுக்கிடையே கடும்பூசல்கள் நிலவின.
 • அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலேயே குடியமர்ந்து இந்தியாவையே தாய் நாடாக வரித்துக் கொண்டனர். இந்திய சமூகத்திலும் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்தனர். அதே சமயம் தங்களது ஒரு சில பழக்க வழக்கங்களையும் விட்டுவிடாமல் பின்பற்றிவந்தனர்.
 • அக்பர் காலம் தொடங்கி, இந்துக்களும், குறிப்பாக ராஜபுத்திரர்களும், உயர்குடியினரின் வர்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எடுத்துக்காட்டாக, ராஜா மன்சிங், ராஜா பீர்பால், ராஜா தோடர்மால் போன்றோரைக் குறிப்பிடலாம். பின்னர், மராட்டியர்களும் முகலாயரிடம் பணியில் சேர்ந்து உயர் குடியினராக ஏற்றம் பெற்றனர்.
 • முகலாய உயர்குடியினர் அதிக ஊதியங்களைப் பெற்ற போதிலும், அவர்களது செலவுகளும் அதிகமாகவே இருந்தன. உயர் குடியினர் ஒவ்வொருவரும், ஏராளமான பணியாளர்கள், குதிரைகள், யானைகள் போன்ற பரிவாரங்களை பராமரிக்க வேண்டும்.
 • முகலாயப் பேரரசர்களைப் போலவே அவர்களும் ஆடம்பர வாழ்க்கைகயை நடத்த முயற்சித்தனர். உயர்ந்தவகை ஆடைகளை அணிந்தனர். பழங்கள்கூட இறக்குமதி செய்து புசித்தனர்.
 • விலையுயர்ந்த அணிகலன்களை ஆண், பெண் இருபாலரும் அணிந்தனர். பேரரசர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும் அவ்வப்போது வழங்கினர்.

கிராமப்புற மக்கள்:

 • செல்வச்சீமான்கள் பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தனர். ஆனால், ஏழை மக்கள் உடுக்க உடையின்றி, குறைந்தபட்ச உடையிலேயே காலம் கழித்தனர். குளிர்காலங்களில்கூட அவர்களுக்கு போதுமான உடைகள் இருப்பதில்லை.
 • தக்காணத்தில் வாழ்ந்த மக்கள் காலணியேதுமின்றி காணப்பட்டதாக நிகிடின் என்ற அயல்நாட்டுப்பணி குறிப்பிட்டுள்ளார். தோல்பொருட்களின் உயர்ந்தவிலையே அதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.
 • அரிசி, தினை, பருப்பு வகைகள் போன்றவை சாதாணமக்களின் முக்கிய உணவாகும். கடற்கரைப்பகுதிகளில் மீன் உணவு தாரளமாகக் கிடைத்தது.
 • நெய், எண்ணெய் விலை மலிவாகவும், உப்பு, சர்க்கரை விலை அதிகமாகவும் இருந்தன. கிராமப்புற மக்கள் ஏராளமான கால்நடைகளை வளர்த்து வந்தமையினால், பால் மற்றும் பால்பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன.

வேளாண்மை:

 • பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 125 மில்லியனாக இருந்திருக்க வேண்டும் என ஒரு மதிப்பீடு கூறுகிறது. பயிரிடுவதற்கு ஏராளமான நிலங்கள் இருந்தமையால் வேளாண்மை தழைத்திருந்தது.
 • கோதுமை. நெல், பருப்பு வகைகள், பார்லி போன்ற பல வகைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. பருத்தி, அவுரி, கரும்பு எண்ணெய்வித்துக்கள் போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டன.
 • பதினேழாம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம் என்ற இரண்டு புதிய பயிர்வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. உருளைக்கிழங்கு, சிகப்பு மிளகாய் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் அறிமுகமாயின.
 • ஆனால், இக்காலத்தில் புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இந்தியாவினால் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களை அண்டை நாடுகளுக்கு ஏற்மதி செய்ய முடிந்தது
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

வாணிப வளர்ச்சி:

 • இந்தியாவிலிருந்து பல்வேறு வணிகவர்க்கத்தினர் நாடு முழுவதும் பரவியிருந்தனர். அவர்கள் உயர்ந்த தொழிலறிவைப் பெற்றிருந்ததோடு அமைப்பு ரீதியாகவும் செயல்பட்டுவந்தனர்.
 • சேத் மற்றும் போரா வணிகர்கள் தொலைதூர வர்க்கத்தில் ஈடுபட்டனர். உட்பகுதி வணிகர்கள் பானிக் எனப்பட்டனர். பஞ்சாராக்கள் என்று அழைக்கப்பட்ட மற்றொரு வணிகப் பிரிவினர் மொத்த வியாபாரத்தில் ஈடுப்பட்டனர்.
 • எருதுகளின் மீது பொதிகளை ஏற்றிக் கொண்டு தொலைதூரம் சென்றுகூட அவர்கள் வர்த்தகம் செய்தனர். ஆறுகளில் படகுகள் மூலமாகவும் மொத்த வியாபாரத்துக்கான பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன.
 • வணிகர்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பை அல்லது சமயத்தை மட்டுமே சார்ந்தவர்களதக இருக்கவில்லை. குஜராத்தி வணிகர்களில் இந்துக்கள், சமணர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் இருந்தனர்.
 • ஆஸ்வால்கள். மகேஷ்வரிகள், அகாவால்கள் அனைவரும் ராஜஸ்தானில் மார்வாரிகள் என்று அழைக்கப்பட்டனர். முல்தானிகள், கத்ரிகள், ஆப்கானிகள் மத்திய ஆசியப்பகுதிகளுடன் வாணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
 • தென்னிந்தியாவில் சோழ மண்டலக் கடற்கரைப்பகுதியில் செட்டியார்களும் மலபார் கடற்கரைப் பகுதியில் முஸ்லிம்களும் முக்கிய வணிகப் பிரிவினராகத்திகழ்ந்தனர்.
 • வங்காளத்திலிருந்து சர்க்கரை, அரிசி, மெல்லிய மஸ்லின் துணிகள் மற்றும் பட்டு ஏற்றமதியாகின. சோழ மண்டலக் கடற்கரை ஜவுளி உற்பத்திமையமாகத் திகழ்ந்தது.
 • அவுரி மற்றும் உணவு தானியங்கள் குஜராத் வழியாக வட இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. காஷ்மீர் சால்வைகள், கம்பள விரிப்புகள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கும் குஜராத் விநியோக மையமாகவும் விளங்கியது.
 • காரீயம், செம்பு போன்ற சில உலோகங்கள், போர்க் குதிரைகள், தந்தம் போன்ற ஆடம்பரப் பொருட்கள் போன்றவை முக்கிய இறக்குமதிப் பொருட்களாகும். தங்கம், வெள்ளி ஆகியவற்றை இறக்குமதி செய்ததன்மூலம் வணிகச் செலாவணி ஈடுகட்டப்பட்டது.
 • அயல்நாட்டு வாணிகம் பெருகியதால், தங்கம், வெள்ளி இறக்குமதி பதினேழாம் நூற்றாண்டில் அதிகரித்து. அந்த நூற்றாண்டில் குஜராத்துக்கு வந்த டச்சு மற்றும் ஆங்கிலேய வணிகர்கள், இந்திய வணிகர்கள் சாமர்த்தியமாகவும், சுறுசுறுப்புடனும் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

முகலாயரின்கீழ் பண்பாட்டு வளர்ச்சி:

 • முகலாயர் ஆட்சிக் காலத்தில் சிற்ப்பான, பரந்துபட்ட பண்பாட்டு நடவடிக்கைகளைக் காணமுடிகிறது. கலை, கட்டிடக் கலை, ஓவியம், இசை, இலக்கியம் போன்ற துறைகளில் அது நன்கு வெளிப்பட்டது. இத்தகைய பண்பாட்டு வளர்ச்சியில், இந்தியப்பாரம்பரியமும் முகலாயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட துருக்கி – ஈரானியப்பண்பாடும் ஒன்று கலந்தன.

கலை, கட்டிடக் கலை:

 • பிரம்மாண்டமான கோட்டைகள், அரண் மனைகள், பொதுக கட்டிடங்கள், மசூதிகள், கல்லறை மாடங்கள் போன்றவை முகலாயக் கட்டிடக் கலையின் முக்கிய அங்கங்களாகும். நீருற்றுகள் நிறைந்த தோட்டப் பூங்காக்களை அமைப்பதில் முகலாயர்கள் மிக்க ஆர்வம் கொண்டிருந்தனர்.
 • காஷ்மீரில் உள்ள நிஷத்பாக், லாகூரி உள்ள ஷாலிமார் பாக், பஞ்சாபிலுள்ள பங்சோர் தோட்டப் பூங்கா போன்றவை இன்றும்கூட நிலைத்திருக்கின்றன.
 • ஷெர்ஷாவின் ஆட்சிக் காலத்தில் பீகாரில் சசாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட கல்லறை மாடமும், டெல்லிக்கு அருகிலுள்ள புராணகிலாவும் கட்டப்பட்டன. இடைக்கால இந்தியாவின் வியத்தகு கட்டிடங்களாக இவ்விரண்டு சின்னங்களும் கருதப்படுகின்றன.
 • அக்பரது ஆட்சிக்காலத்திலிருந்து ஏராளமான கட்டிடங்கள் அமைக்கும்பணி தொடங்கியது. அவர் கட்டியுள்ள பல கோட்டைகளில் ஆக்ராவிலுள்ள கோட்டை புகழ் வாய்ந்தது. அது சிகப்பு மணற்பாரறகளாலானது. லாகூர் மற்றும் அலகாபாத்தில் அக்பரது பிற கோட்டைகளைக் காணலாம்.
 • ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் கோட்டைகளை கட்டும் பணி அதன் உச்சியைத் தொட்டது. டெல்லியிலுள்ள செங்கோட்டை, அதில் அமைந்துள்ள ரங் மகால், திவானி ஆம், திவானி காஸ் போன்றவை அவரது படைப்புகளே.
 • அக்பர், ஆக்ராவிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பதேபூர் சிக்ரி (வெற்றி நகரம்) என்ற இடத்தில் அரண்மனைக் கோட்டை ஒன்றை எழுப்பினார். அந்த வளாகத்தில் குஜராத்தி மற்றும் வங்காளப் பாணியிலான பல கட்டிடங்கள் அமைந்துள்ளன.
 • குஜராத்தி பாணிக் கட்டிடங்களை அக்பர் அவரது ரஜபுத்திர மனைவியருக்காக அமைந்திருக்கக் கூடும். அங்;குள்ள ஜீம்மா மசூதி மிகவும் பிரம்மாண்டமான கட்டிடமாகும்.
 • அந்த மசூதியின் நுழைவாயில் புலந்த் தர்வாசா அல்லது உயர்ந்த நுழைவாயில் எனப்படுகிறது. அதன் உயரம் 176 அடியாகும். குஜராத்தில் அக்பர் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக அது எழுதப்பட்டது.
 • பதேபூர் சிகரியில் உள்ள ஜோத்பாய் அரண்மனை, ஐந்து அடுக்குகள் கொண்ட பாஞ்ச் மகால் போன்றவையும் முக்கிய கட்டிடங்களாகும்.
 • டெல்லியிலுள்ள உமாயூன் கல்லறை அக்பரசி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதன் குவிகை மாடம் பளிங்கினால் ஆனது. தாஜ்மகாலுக்கு முன்னோடியான அதனைக் கருதலாம்.
 • ஆக்ராவுக்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் அக்பரின் கல்லறையை ஜஹாங்கீர் கட்டி முடித்தார். ஆக்ராவில் தனது தந்தை இதிமத் தௌலாவின் கல்லறையை நூர்ஜஹான கட்டியுள்ளார்.
 • வெள்ளைப் பளிங்குக் கற்களால்; அது அமைக்கப்பட்டுள்ளது. அதன் சுவர்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பூவேலைப் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வகை அலங்கார வேலைகளுக்கு பியட்ராடியூரா என்று பெயர்.
 • ஷாஜகான் கட்டிய தாஜ் மஹாலில் இவ்வகை அலங்கார பூவேலைப் பாடுகளை ஏராளமாகக் காணலாம். தாஜ்மகால் கட்டிடக் கலையின் மணிமகுடமாகக் கருதப்படுகிறது.
 • முகலாயர்கள் வளர்த்தெடுத்த அனைத்து வகையான கட்டிடக்கலைப்பாணிகளும் அதில் காணப்படுகின்றன. தாஜ்மகாலின் முக்கிய சிறப்பே அதன் பெரிய குவிமாடமும் நான்கு மெல்லிய உயர் கோபுரங்களுமானும். அலங்கார வேலைப்பாடு கள் குறைவாகவே காணப்படுகின்றன.
 • ஷாஜகான் காலத்தில் மசூதி கட்டப்படுவதும் அதிகரித்தன. ஆக்ராவில் கட்டப்பட்டுள்ள முத்து மசூதி முழுவதும் வெள்ளைநிறப் பளிங்குக் கற்களால் ஆனாதாகும். டெல்லியிலுள்ள ஜீம்மா மசூதி செந்நிறக் கற்களானவை.
 • முகலாயக் கட்டிடக்கலையின் தொடர்ச்சி பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலும் காணப்பட்டது. மாகாண அரசுகளிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டது. அம்ரிட்சரில் உள்ள பொற்கோயிலில் முகலாயக் கட்டிடக்கலையின் கூறுகளைக் காண முடிகிறது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

ஓவியங்களும் இசையும்:

 • ஓவியக்கலைக்கு முகலாயர்கள் ஆற்றியுள்ள தொண்டு மகத்தானதாகும். உமாயூன் பாரசீகத்தில் தங்கியிருந்த போதுதான் முகலாயர்கால ஒவியக்கலைக்கு நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டது.
 • அவர் இந்தியாவிற்கு திரும்பியபோது மீர் சையது அலி, அப்துல் சமது என்ற இரண்டு ஓவியர்களையும் அழைத்து வந்தார்.
 • அக்பரது ஆட்சிக்காலத்தில் இவ்விரு ஓவியர்களும் புகழ்பெற்றுத் திகழ்;ந்தனர். பல்வேறு இலக்கிய மற்றும் சமய நூல்களுக்கு உருவங்கள் மூலம் விளக்கமளிக்கும் பணியை அக்பர் தொடங்கிவைத்தார்.
 • நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஓவியர்கள் அவரது அவைக்கு வரவழைக்கப்பட்டனர். இந்துக்களும், முஸ்லிம்களும் இப்பணியில் ஈடுப்பட்டனர். பஸ்வான், மிஸ்கினா, தஸ்வந்த் ஆகியோர் அக்பரது அரசவைக்கலைஞர்களாகவும் ஏற்றம் பெற்றனர்.
 • பாரசீக மொழியில் எழுதப்பட்டிருந்த மகாபாரதம், இராமாயணம் ஆகிய காவியங்களுக்கான விளக்கப்படங்கள் நுண் ஓவியங்களாகத் தீட்டப்பட்டன. அக்பர் நிறுவிய கலைக்கூடத்தில் பல்வேறு இந்தியக் கதைகளும் நுண் ஓவிய விளக்கப்படங்களாக வரையப்பட்டன.
 • முகலாயர்கால ஓவியங்களில், அக்பர் நாமா உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுப்படைப்புகளும் கருத்துருக்களாக இடம் பெற்றிருந்தன. அவற்றில் முக்கியமானது ஹம்சா நாமா. ஆதில் 1200 ஓவியங்கள் இருந்தன. இந்திய வண்ணங்களான மயில் கழுத்துநீலம், இந்திய சிகப்பு போன்றவற்றையும் ஓவியர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்
 • ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் முகலாயர் ஓவியக் கலை அதன் உச்சியைத் தொட்டது. அபுல்ஹாசன், பிஷன் தாஸ், மது, ஆனந்த், கோவர்தன், உஸ்தாத் மன்சூர் போன்ற ஏராளமான ஓவியர்களை அவர் பணியிலமர்த்தினார். வேட்டையாடுதல்,  போர் நிகழ்வுகள், அரசவைகள் போன்ற காட்சிகளைத்தவிர, உருவப்படங்களும், விலங்குகளின் படங்களும் ஓவியமாகத் தீட்டப்பட்டன.
 • எழுத்துக்கலை, ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்ட பல செருகேடுகளும் (ஆல்பம்) முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் ஐரோப்பிய ஒவியப்பாணியின் தாக்கத்தை காணமுடிகிறது.
 • முகலாயர் காலத்தில் இசைக்கலையும் நன்கு வளர்ச்சியடைந்தது. குவதலியரைச் சேர்ந்த தான்சேன் என்ற பாடகரை அக்பர் ஆதரித்தார். தான்சேன் பல ராகஙங்களை உருவாக்கினார். ஜஹாங்கீர், ஷாஜகான் ஆகியோரும் இசையில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

மொழி, இலக்கியம்:

 • அக்பரது ஆட்சிக்காலத்தின்போது முகாலாயப் பேரரசு முழுவதிலும் பாரசீக மொழி பரவலாக வழக்கிலிருந்தது.
 • அக்காலத்தில் சிறந்த அறிஞராகவும், வராற்றாசிரியராகவும் அபுல்பாசல் விளங்கினார். அவர் ஏற்படுத்திய உரைநடைப்பாணி பல தலைமுறைக்காலம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
 • அக்காலத்தில் பல வரலாற்றுப்படைப்புகள் உருவாக்கப்பட்டன. அய்னி அக்பரி, அக்பர் நாமா ஆகியவற்றை அபுல் பாசல் எழுதினார். அவரது சகோதரரான அபுல் பெய்சி அக்காலத்திய முன்னணி கவிஞர்.
 • அவரது மேற்பார்வையில்தான் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. உத்பி, நாசிரி இருவரும் மற்ற பாரசீக மொழிக் கவிஞர்களாவர்.
 • ஜஹாங்கீரின சுயசரிதமான துசுகி ஜஹாங்கீரி அதன் உன்னத நடைக்கு பெயர் பெற்றதாகும். கியாஸ் பெக், நாகிப்கான், நியமத்துல்லா போன்ற அறிஞர்களையும் ஜஹாங்கீர் ஆதரித்தார்.
 • பாதுஷதா நாமா என்ற நூலை எழுதியவர் அப்துல் ஹமீது லாஹோரி. ஷாஜகான் நாமாவைப் படைத்தவ இனாயத்கான். இந்த இருவர் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், வரலாற்று அறிஞர்களையும், ஷாஜகான் போன்றி ஆதரித்தார்.
 • ஷாஜகானின் புதல்வர் தாராஷீக்கோ, பகவத்கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை பாரசீக மெரியாக்கம் செய்தார். அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் பல வரலாற்றப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. பாரசீக மொழியின் புகழ்வாய்ந்த அகராதிகள் முகலாயர் காலத்தில்தான் தொகுக்கப்பட்டன.
 • வங்காளம், ஒரியா, ராஜஸ்தானி, குஜராத்தி போன்ற வட்டார மொழிகளும் முகலாயர் ஆட்சி காலத்தில் வளர்ச்சி பெற்றன.
 • இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல பக்திப்படைப்புகளும் வட்டார மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அக்பர் காலம் தொடங்கி இந்தி கவிஞர்களும் முகலாயர் அவையில் இடம்பெற்றனர்.
 • இராமாயணத்தின் இந்தி வடிவமான ராம் சரித்மனஸ் என்ற நூலைப் படைத்த துளசிதாசர் ஒரு புகழ் மிக்க இந்திக் கவிஞராவார்.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here