முக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2019

0
முக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2019
முக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2019

முக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2019

இங்கு ஆகஸ்ட் 2019 மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் – ஆகஸ்ட் 2019 பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட்  2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஆகஸ்ட் 2019

சர்வதேச ஒப்பந்தங்கள்:

வரிசை எண்

(இந்தியா மற்றும் _________) ஒப்பந்தம் துறை

நாட்டின் விவரங்கள்

1

இஸ்ரோ-பொலிவிய விண்வெளி நிறுவனம் அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராயவும் பயன்படுத்தவும் ஒத்துழைப்பு அளிப்பதற்காக இஸ்ரோ மற்றும் பொலிவிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதி- ஈவோ மோரல்ஸ்
துணை ஜனாதிபதி – அல்வாரோ கார்சியா லினெரா
தலைநகரம் – சுக்ரே
 நாணயம் – போலிவியானோ
2 இந்தியா – ரஷ்யா ரஷ்யாவின் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப தொடர்பு பிரிவு (ஐ.டி.எல்.யூ) அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள விண்வெளி ஏஜென்சிகள் மற்றும் தொழில்சாலைகளுடன் பரஸ்பர ஆற்றலுடனான விளைவுகளுக்காக விளைவுகளுக்காக இந்தப்பிரிவு ஒருங்கிணைந்து செயல்படும். ஜனாதிபதி – விளாடிமிர் புடின்
பிரதமர் – டிமிட்ரி மெட்வெடேவ்
தலைநகரம் – மாஸ்கோ
நாணயம் – ரஷ்ய ரூபிள்

3

இந்தியா – கினியா இந்தியாவும் கினியாவும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பாரம்பரிய மருத்துவ முறை, இ-வித்யபாரதி – இ-ஆரோக்ய பாரதி மின்-விபிஏபி நெட்வொர்க் திட்டம் மற்றும் புதுப்பித்தல் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புடன் இரு நாடுகளுக்கிடையில் இந்தஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜனாதிபதி – ஆல்பா காண்டே
பிரதமர் – இப்ராஹிமா கசோரி ஃபோபனா
தலைநகரம் – கோனக்ரி

நாணயம் – கினியன் பிராங்க்

4 இந்தியா – சாம்பியா புவியியல் மற்றும் கனிம வளங்கள், பாதுகாப்பு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமும் மேலும் இந்தியாவின் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் ஜாம்பியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிப்ளமசி அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் மற்றும் ஈ.வி.பி.ஏ.பி நெட்வொர்க் திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் என மொத்தம் ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஜனாதிபதி – எட்கர் லுங்கு
துணை

ஜனாதிபதி – இன்னோங் வினா

தலைநகரம் – லுசாக்கா
நாணயம் – சாம்பியன் குவாச்சா
5 இந்தியா – பாக்ஹ்ரின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் பஹ்ரைனும் ஒப்புக்கொணடடுள்ளன. மேலும்  இரு நாடுகளும் கலாச்சார பரிமாற்றத் திட்டம், விண்வெளி தொழில்நுட்பம், சூரிய ஆற்றல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அரசர் – ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா
இளவரசர் – சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா
தலைநகரம் – மனமா
நாணயம் – பஹ்ரைன் தினார்
6 இந்தியா-பெரு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்திற்கு உட்பட்ட தேசிய மருத்துவ தாவர வாரியத்திற்கும், பெரு குடியரசின் சுகாதார அமைச்சகத்திற்குட்பட்ட தேசிய சுகாதார நிறுவனத்திற்கும் மருத்துவ தாவர உயிரி பன்முகத்தன்மை மற்றும் மருத்துவ தாவரங்கள் அடிப்படையிலான உள்நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதி அளிக்கப்பட்டது. ஜனாதிபதி – மார்ட்டின் விஸ்கார்ரா
துணை ஜனாதிபதி – மெர்சிடிஸ் அரியோஸ்
தலைநகரம் – லிமா
நாணயம் – சோல்

தேசிய ஒப்பந்தங்கள்

அடுத்த அமர்விலிருந்து காகிதமில்லா மக்களவையாக மாறவுள்ளது

  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அடுத்த அமர்விலிருந்து கீழ் சபை காகிதமில்லா மக்களவையாக மாறும் என்று அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான ரூபாயை அரசுக்கு மிச்சப்படுத்தும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்த அமைச்சரவை முடிவு

  • இந்திய தலைமை நீதிபதியைத் தவிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 30 லிருந்து 33 ஆக உயர்த்தும் மசோதாவை அறிமுகப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 2016 ல் அரசு 906 லிருந்து 1079 ஆக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படைக்கும் சியாலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • கடற்படை ஏர் என்க்ளேவ் (என்ஏஇ), கொச்சி மற்றும் கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (சிஐஏஎல்) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சியாலில் நடைபெற்ற ஒரு முறையான விழாவில் கையெழுத்தானது. பாதுகாப்பான மற்றும் தடையற்ற இராணுவ விமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் நிலையான இயக்க நடைமுறைகளையும் அவைகள் சியால் மற்றும் இந்திய கடற்படையினரால் பின்பற்றப்படுவதையும் குறிப்பிடுகிறது.

AWHO மற்றும் டாடா ரியால்டி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

  • 22 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய இராணுவத்தின் இராணுவ நல வீட்டுவசதி அமைப்பு (AWHO) மற்றும் டாடா ரியால்டி & ஹவுசிங் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.டாடா ரியால்டியின் 1313 ‘Ready to Move in’’ திட்டங்களில் உள்ள வசிக்கக்கூடிய பகுதிகளை உடனடியாக இந்திய ராணுவ வீரர்களுக்கு கையகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுகிறது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் NACO இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

  • சமூக நீதித் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO), சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. NAPDDR & NACO இன் திட்டங்களில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக NACO மற்றும் போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டம் (NAPDDR) இன் இலக்கு குழுக்களை இணைப்பது இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

இந்திய கடற்படைக்கும் ஐஎம்டிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • ஐஎம்டியால் சூறாவளி கண்டறிதல் ரேடார் (சிடிஆர்) கட்டிடத்தை ஒப்படைப்பதற்காக இந்திய கடற்படை (ஐஎன்) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொச்சியின் கடற்படைத் தளத்தில் 28 ஆகஸ்ட் 19 அன்று கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய கடற்படைக்கு சி.டி.ஆர் கட்டிடத்தை கொச்சியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் வானிலை நோக்கங்களுக்காக பயன்படுத்த உதவும்.

Download PDF

Current Affairs 2019 Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!