மாதம் 22 ஜிபி டேட்டா எஸ்ட்ராவா? மகிழ்ச்சியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

0
மாதம் 22 ஜிபி டேட்டா எஸ்ட்ராவா? மகிழ்ச்சியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி வகித்து வரும் ஜியோ மற்ற ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மாதத்திற்கு 22 ஜிபி அதிகமாக வழங்கி வருகிறது.

அதிரடி ஆஃபர்:

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதில் போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர். முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் முதல் 1 வருடத்திற்கான சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது, குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் பல திட்டங்களும் அமலில் உள்ளன.

ஏர்டெல்:

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் வசதியுடன் 2 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 300 SMS, Wynk Music மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்றவைகளும் வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான நல்ல செய்தி – பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்!!

வோடாபோன் ஐடியா:

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் வசதியுடன் 2 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 300 SMS, 200க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் & நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வி மூவீஸ் அண்ட் டிவி ஆப் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ:

24 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் வசதியுடன் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100SMS, JioTv, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்றவைகளும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா உடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோ மாதத்திற்கு 22 ஜிபி டேட்டா அதிகமாக வழங்கி வருகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!