தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வெப்பச்சலனம் காரணமாக 19.06.2021, 20.06.2021 அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னடலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஒரே நாளில் 6,62,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி – பீகார் மாநிலம் சாதனை!
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 21.06.2021, 22.06.2021 அன்று மேற்கு தொடர்ச்சிக்கு மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேல்பவானி 22 செமீ, அவலாஞ்சி 13 செமீ, சின்னக்கல்லார், பந்தலூர் தலா 6 செமீ, வால்பாறை 5 செமீ, சோலையாறு, கூடலூர் பஜார் தலா 4 செமீ, பெரியாறு 3 செமீ, பாபநாசம் 2 செமீ, உதகமண்டலம் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
18.06.2021, 19.06.2020 அன்று ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 18.06.2021, 19.06.2021 அன்று கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
TN Job “FB
Group” Join Now
தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.