ராணுவத்தில் பணியாற்ற புதிய நடைமுறை – விண்ணப்பிக்க முழு விவரம் இதோ!

0
ராணுவத்தில் பணியாற்ற புதிய நடைமுறை - விண்ணப்பிக்க முழு விவரம் இதோ!
ராணுவத்தில் பணியாற்ற புதிய நடைமுறை - விண்ணப்பிக்க முழு விவரம் இதோ!
ராணுவத்தில் பணியாற்ற புதிய நடைமுறை – விண்ணப்பிக்க முழு விவரம் இதோ!

ராணுவத்தில் தற்போது ஆட்சேர்ப்புக்கான நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது முதலில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ராணுவ ஆட்சேர்ப்பு

ராணுவத்தில் ஆட்சேர்ப்பிற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கு முதற்கட்டமாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுவதாக சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலக இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!

Follow our Instagram for more Latest Updates

இவர் தெரிவித்துள்ளதாவது, ராணுவ ஆட்சேர்ப்பில் தேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக தற்போது ஆன்லைன் வாயிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதித்தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின்பு தேர்வானவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு வருகிற ஏப்ரல் 17 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இத்தேர்விற்கு வருகிற மார்ச் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் இதில் ரூ.250 ராணுவம் சார்பாக செலுத்தப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்தினால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற 79961 57222 என்ற எண்ணிற்கோ அல்லது [email protected] மற்றும் joinindian [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!