நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் குறைவான மெட்ரோ நகரங்கள் – NCRB அறிக்கை!!

0
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் குறைவான மெட்ரோ நகரங்கள் - NCRB அறிக்கை!!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் குறைவான மெட்ரோ நகரங்கள் - NCRB அறிக்கை!!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் குறைவான மெட்ரோ நகரங்கள் – NCRB அறிக்கை!!

நாடு முழுவதும் உள்ள 19 மெட்ரோ நகரங்களை ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மிக குறைந்த விகிதத்தை தமிழகத்தில் உள்ள கோவை மற்றும் சென்னை நகரங்கள் கொண்டுள்ளதாக தேசிய குற்ற பதிவேடு பணியகம் (NCRB) தெரிவித்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரம் குறித்து தேசிய குற்ற பதிவேடு பணியகம் (NCRB) ஆய்வு நடத்தியது. அதில் தமிழகத்தில் உள்ள கோவை, சென்னை நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவான விகிதத்தில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் (9.0), சென்னை (13.4), பெங்களூரு (67.3), மும்பை (53.8), கொச்சி (37.5) லக்னோ (190.7), டெல்லி (129.1), அதிகபட்ச குற்ற விகிதம் கொண்ட நகரமாக ஜெய்ப்பூர் (162.9) விகிதமாக உள்ளது.

கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு செல்ல தாமதத்தால் 2799 பேர் பலி – மாநில சுகாதாரத்துறை அறிக்கை!

சென்னையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018 மற்றும் 2020 ஆண்டுகளில் 761, 729 என இருந்த நிலையில் தற்போது 576ஆக குறைந்துள்ளது. அதே போல கோவையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2018 இல் 107 ஆக இருந்தது, இது 2019 இல் 85 ஆகக் குறைந்தது, அதன் பின் 2020 இல் 97 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு கேரளாவில் மெட்ரோ நகரங்கள் சென்னையுடன் ஒப்பிடும்போது குறைவான குற்றங்களைக் கொண்டிருந்தன. கொச்சியும் கோழிக்கோடும் 403 மற்றும் 294 குற்ற வழக்குகளை கொண்டுள்ளன.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு தடை? அரசு பதிலளிக்க உத்தரவு!

கடந்த ஆண்டு நாட்டிலேயே கோவை நகரில் 97 குற்றங்கள் பதிவானது தான் குறைவானது ஆகும். அதற்கு காரணம் அந்த நகரில் உள்ள குறைந்த பட்சம் மக்கள் தொகை ஆகும். சென்னை, கோயம்புத்தூர், கொச்சி மற்றும் கோழிக்கோடு இந்த நான்கு நகரங்களில் சென்னை தான் மிகப்பெரிய மெட்ரோ நகரமாகும். நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் பெண்கள் பாதுகாப்பாக வாழ சிறந்த மாநிலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!