தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைன் முறையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக வழங்கப்படுகிறது. அத்துடன் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் ஒவ்வொரு நாளும் ரேஷன் கார்டுக்கு பெரும்பாலோனோர் விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ரேஷன் கார்டுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும்.

SBI வங்கியின் முக்கிய அறிவிப்பு – இந்த நாட்களில் பணப்பரிவர்த்தனை செய்வது கடினம்!

இதற்கு முன்பாக அலுவலகத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. மேலும் இந்த ரேஷன் கார்டு பல மாதங்களுக்கு பிறகே விண்ணப்பித்தவர்களுக்கு கிடைத்தது. தற்போது ஆன்லைன் முறையில் புதிய கார்டுக்கு விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் கைகளில் கிடைக்கிறது. இதில் குடும்பத் தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, எந்த மாவட்டம், எந்த மண்டலம் அல்லது வட்டம், எந்தக் கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், கிராமம், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படுகிறது.

தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட் கார்டு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

2. இப்போது திரையில் ஒரு படிவம் தோன்றும். இதில் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.

3. இந்த படிவத்தை பூர்த்தி செய்த பிறகு அதனுடன் தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

4. இந்த ஆவணத்தின் அளவு 1.0 MB கொண்டதாக இருக்க வேண்டும். இந்த ஆவணம் png, gif, jpeg, pdf உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

5. இதையடுத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்பு குறித்த விவரங்களை உள்ளிட வேண்டும்.

6. அடுத்ததாக ‘உறுதிப்படுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

7. இறுதியாக reference எண் தங்களுக்கு வழங்கப்படும். இதனை பயன்படுத்தி ரேஷன் கார்டின் நிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

8. இப்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு பின்னர் தங்களின் முகவரிக்கு ரேஷன் கார்டு அனுப்பி வைக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!