அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலி அறிமுகம்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலி அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலி அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலி அறிமுகம்!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் ஒரு முயற்சியான மேரா ரேஷன் செயலியின் பயன்பாடுகளை பெற அதனை பதிவிறக்கம் செய்வது, அதன் பயன்பாடு மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

மேரா ரேஷன் ஆப்

இப்போது, வேலை நிமித்தமாக புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைக்க உதவும் வகையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) என்ற திட்டத்தை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்த முன் முயற்சியானது அரசுக்கு சொந்தமான ரேஷன் சேவைகளை நாட்டின் எந்தவொரு மூலையிலும் இருந்து பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்த இது உதவி செய்கிறது.

JEE தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மெயின் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு!

இந்த சேவையை பெறுவதற்கான செயல்பாடுகள் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. சுருங்க கூறின், மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தற்போது செயலி மூலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வழக்கமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் PDS எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, PDS நன்மைகளைப் பெறுவதில் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரேஷன் பயனாளிகள் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளை பெற்றுக்கொள்ள முதலில் மேரா ரேஷன் செயலியை தங்களது மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதற்கான வழிகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ள வேறு சில முக்கியமான அம்சங்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது செயலியை பதிவிறக்கம் செய்ய, முதலில் Google Play Storeக்குச் செல்லவும்
அதில் தேடல் பொத்தானைக் கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என தட்டச்சு செய்யவும் மத்திய Aepds குழு பதிவேற்றிய ஆப்பை பதிவிறக்கம் செய்யவும் இப்போது பயன்பாட்டைத் திறந்து உபயோகிக்கலாம்.

பயன்பாடு மற்றும் நன்மைகள்:
  • இப்போது submit பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் ரேஷன் கார்டு எண்ணை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்
  • பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இயக்குவதன் மூலம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் பயனர்கள் சரிபார்க்கலாம்
  • ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்

தமிழக ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் முறைகேடு – விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து!

  • மேலும், ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை சரிபார்க்கலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் சீடிங் சேவைகளும் இதில் சாத்தியமாகும்.
  • பயனாளி தனது மொபைல் எண் மற்றும் ரேஷன் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் சேவைகளை மதிப்பிடலாம் மற்றும் கருத்து தெரிவிக்கலாம்
  • நியாயமான விலை என அறியப்படும் உரிமம் பெற்ற கடைக்கு Fps பின்னூட்டம் மூலம் கருத்துக்களை அளிக்கலாம்.
  • அவர்களின் தற்போதைய பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களின் உரிமையின் விவரங்களை சரிபார்க்கலாம்.
  • இந்த செயலியில் பயனர்கள் தங்கள் விரல் நுனியில் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள்.
  • ஆரம்பத்தில், இந்த செயலிஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே இருந்தது.
  • ஆனால் இப்போது இதில் 10 மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!