JEE தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மெயின் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு!

0
JEE தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - மெயின் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு!
JEE தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - மெயின் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு!
JEE தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மெயின் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு!

நடப்பு ஆண்டுக்கான JEE முதன்மை தேர்வு நான்கு அமர்வுக்கு பதில் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். இந்த ஆண்டு இறுதியில் JEE முதன்மை தேர்வு விண்ணப்பிப்பதிவு தொடங்கலாம். மேலும் முதல் தேர்வு JEE மெயின் தேதி NTA யால் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

JEE மெயின் தேர்வு தேதி:

இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைக்க, இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படும். முதல் தேர்வு JEE மெயின் எனப்படுகிறது. இரண்டாம் தேர்வு JEE அட்வான்ஸ் என அழைக்கப்படுகிறது.அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் காரணமாக 2021-22 கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு தேர்வு இன்னும் நடத்தப்படாமல் உள்ளது.

தமிழக ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் முறைகேடு – விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து!

இந்த வகையில் CBSE வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வு வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது.எனவே தேர்வுகள் தாமதமாகி வருவதைக் கருத்தில் கொண்டு, JEE மெயின் 2022 தேர்வை நான்கு அமர்வுகளுக்கு பதிலாக இரண்டு அமர்வுகளாக நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, நுழைவுத் தேர்வை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே நடத்த NTA முடிவு செய்துள்ளது. மேலும், JEE Main 2022 இன் நான்கு அமர்வுகள் நடத்தப்பட்டால் தாமதம் ஏற்படும் என்பதால் இரண்டு அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

EPFO அக்கவுண்ட் வைத்துள்ளவரா நீங்கள்? உங்களது பேலன்சை தெரிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

எனவே JEE மெயின் 2022 ஐ முன்பு இருந்த இரண்டு அமர்வுகளில் நடத்த வேண்டும் என்று பங்குதாரர்களுக்கு NTA முன்மொழிந்துள்ளது. இதனை தொடர்ந்து IIT பாம்பே JEE அட்வான்ஸ்டு 2022-க்கான விண்ணப்ப போர்டல் திறக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் தேர்வு முகமை JEE முதன்மை 2022 அட்டவணையை வெளியிட்டவுடன் IIT பாம்பே JEE மேம்பட்ட 2022 ஐ அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தேர்வு JEE மெயின் பல அமர்வு கணினி அடிப்படையிலான முறையில் நடத்தப்படுகிறது. மேலும் JEE Main 2022 தேர்வு தேதி குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!