நடப்பு நிகழ்வுகள் மே 22

0

நடப்பு நிகழ்வுகள் மே 22

முக்கியமான நாட்கள்

மே 22: சர்வதேச பல்லுயிர் தினம்

தீம் :செலிப்ரேட்டிங் 25 இயர்ஸ் ஆப் ஆக்க்ஷன் ஆன் பயோடைவர்சிட்டி

  • பல்லுயிரியலின் முக்கியத்துவத்தையும், அச்சுறுத்தல்களையும் பற்றி விழிப்புணர்வு பெறவும், நிலையான வளர்ச்சிக்கான அதன் பங்களிப்பை சிறப்பித்துக் காட்டவும் இந்த தினம் அனுசரிக்க படுகிறது.

தேசிய செய்திகள்

மகாராஷ்டிரம்

மும்பை-புனே இ-வழி: வாகன ஓட்டிகளுக்கு 2045 வரை கட்டணம் செலுத்த வேண்டும்

  • தவரப்பட்ட இணைப்பு திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு 15 வருடங்களை அதிகப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (MSRDC) தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

தாமிரபரணி மகா புஷ்கரம்

  • 144 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் புஷ்கரம் நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கர்நாடகம்

மைசூரூவின்  புறநகர்பகுதிக்கு ஏரி மறுமலர்ச்சி திட்டம் 

  • “2021ஆம் ஆண்டிற்குள் மைசூரு வாட்டர் பாசிட்டிவ் “,என்பது மைசூரு மற்றும் சுற்றியுள்ள ஏரிகளை  பாதுகாப்பதற்காக  இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ), மைசூரு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒரு முயற்சியாகும்.

ஆந்திர பிரதேசம்

நாகயலங்கையில் ONGC நடவடிக்கைகள்

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) மூலம் கச்சா எண்ணெய் தோண்டும் பணிகள் கிருஷ்ணா மாவட்டத்தில் நாகயலங்கா தொகுதியில் தொடங்கவுள்ளது.

சர்வதேச செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய SCO சந்திப்பில் இந்தியா கலந்து கொள்கிறது.

  • மே 23 முதல் 25 வரை பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானால் நடத்தப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) – பிராந்திய பயங்கரவாத அமைப்பின் (SCO-RATS) உறுப்பினர்களுடன் சந்திப்பதற்கான மூத்த பிரதிநிதிகளை இந்தியா அனுப்பியுள்ளது .

அறிவியல் செய்திகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட  நீர் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு நிலை

  • தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு நிலை என்னும் அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம்(WII) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
  • கவனிக்கப்பட்ட உயிரினங்கள்:சீபோல்ட் மென்மையான செதிலுள்ள நீர் பாம்பு (என்ஹைட்ரிஸ் ஸீபோல்டி) மற்றும் இந்திய ஸ்கிமமர் (ரைன்சோபஸ் ஆல்பிக்கோலிஸ்) என்னும் ஒரு பறவை

பெரிய சீன சாலமந்தர் அழிவின் விளிம்பில் உள்ளது .

  • உலகின் மிகப்பெரிய சீன சலாமாண்டர்கள்,உணவிற்காக சட்டவிரோமாக வேட்டையாடப்படுவதால் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது.

நிலவின் மறு பக்கத்தை ஆராயும்  சீனா

  • நிலவின் இருளான மறு பக்கத்தை ஆராய சீன விண்வெளி ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது பூமியில் இருந்து செயற்கைகோள் ஒன்றை அனுப்பியுள்ளது.

மாநாடுகள்        

“சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான “பிராந்திய மாநாடு

  • போபாலில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3 வது வருடாந்தர கூட்டத்திற்கு முன்னதாக “சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி” பற்றிய ஒரு நாள் பிராந்திய மாநாடு நடக்கவுள்ளது.

திட்டங்கள்

நய் ரஹேன் நய் மன்சிலேன்

  • ஹிமாசல பிரதேசத்தில் சுற்றுலா வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக நய் ரஹேன் நய் மன்சிலேன் திட்டத்தை மாநில அரசு துவக்கியுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் மாதிரி சட்டம்

  • உற்பத்தி பொருட்களின் விலை ஏற்ற,இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கத்தில் விவசாய ஒப்பந்த சட்ட மாதிரியை மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வெளியிட்டார்.

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

  • இன்ட்ராப்ரெனியூர்ஷிப் அண்ட் மேனேஜ்மென்ட் ஆப் பார்மர் ப்ரொடியூசிங் கம்பெனிஸ்” – க்ராண்ட் த்ரோண்டோன்

நியமனங்கள்

  • அர்செனல் புதிய மேலாளர் – யூனை எமரி
  • இந்திய மேலாண்மை நிறுவனம், கோழிக்கோடு, (ஐஐஎம்-கே) – டெபாஷிஸ் சாட்டர்ஜி

விளையாட்டு செய்திகள்

கால்பந்து

  • ஹாரி கேன் இங்கிலாந்தின் கால்பந்து உலகக் கோப்பையின் கேப்டனாக ரஷ்யாவில் நியமிக்கப்பட்டார்.

மியூனிச்சில் நடக்கும் ஐ.எஸ்.எஸ்.எஃப் ஷூட்டிங் உலகக் கோப்பையில் இந்தியா போட்டியிடவுள்ளது

  • மனு பாக்கர்,ஹீனா சித்து,ஜீத்து ராய் ஆகியோர் ஐஎஸ்எஸ்எப் ஷூட்டிங் உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ளனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!