மதுரை முத்துவின் வீட்டில் நடந்த சோகம் – மறைந்த முதல் மனைவி குறித்து உருக்கமான பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
மதுரை முத்துவின் வீட்டில் நடந்த சோகம் - மறைந்த முதல் மனைவி குறித்து உருக்கமான பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மதுரை முத்துவின் வீட்டில் நடந்த சோகம் - மறைந்த முதல் மனைவி குறித்து உருக்கமான பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மதுரை முத்துவின் வீட்டில் நடந்த சோகம் – மறைந்த முதல் மனைவி குறித்து உருக்கமான பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக வலம் வரும் மதுரை முத்து, தனது முதல் மனைவியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி தினத்தன்று ஒரு உருக்கமான பதிவை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை முத்து

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப் போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் ஒரு சிறப்பான நடுவராக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் மதுரை முத்து. தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையான பேச்சால் மக்களை மகிழ்வித்து வரும் முத்து, மதுரை மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டவர். பொதுவாக, பட்டிமன்ற பேச்சாளரான இவர் தமிழ் சின்னத்திரையில் அசத்த போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை பிரச்சனைக்கு காரணமான நபரை கண்டுபிடித்த கண்ணன் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இப்படி பல்வேறு டிவி சேனல்களில் பேச்சாளராக இருந்து வந்த மதுரை முத்துவை நடுவராக அறிமுகம் செய்து வைத்தது விஜய் டிவி தான். அந்த வகையில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியை தொடர்ந்து ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இவர் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’ சீசன் 2விலும் போட்டியாளராக, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்திருந்தார்.

இப்படி நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட மதுரை முத்துவின் வாழ்க்கையில் சில சோகமான சம்பவங்களும் நடந்திருக்கிறது. அதாவது ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மதுரை முத்து, லேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இப்படி இருக்க கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற கார் விபத்தில் மதுரை முத்துவின் மனைவி லேகா உயிரிழந்தார். இதை தொடர்ந்து மதுரை முத்து, மறைந்த தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி? அதிர்ச்சியில் குடும்பம்! ஷாக் ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில், தனது முதல் மனைவியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு மதுரை முத்து ஒரு உருக்கமான பதிவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருக்கிறார். அந்த பதிவில் மனைவி லேகாவின் நினைவு அஞ்சலி புகைப்படத்துடன், எங்கள் வீட்டு தெய்வத்திற்கு 6ம் ஆண்டு அஞ்சலி என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் மதுரை முத்து. இந்த பதிவை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக மதுரை முத்துவுக்கு தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here