ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!

0
ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் - மாநில அரசு அறிவிப்பு!

தெலுங்கானா அரசு சார்பில் ஹைதராபாத் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ.500 விலையில் எல்பிஜி சிலிண்டர் வழங்க இருக்கிறது.

சிலிண்டர் விலை

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்தியை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள தகுதியுள்ள பெண்களுக்கு, மானிய விலையில் அதாவது ரூ. 500 விலையில் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500 நிதியுதவி வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய  முதல்வர் இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்த தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். ஹைதராபாத் மற்றும் பிற மாவட்டங்களில் ரூ.500 எல்பிஜி சிலிண்டர்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அதே போல பிரஜா பலனா திட்டத்தில் டிசம்பர் 28 முதல் ஜனவரி 6 வரை, மொத்தம் 91.49 லட்சம் பெண்கள் மானிய விலையில் ரூ.500 விலையுள்ள எல்பிஜி சிலிண்டர் பெற விண்ணப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!