அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியல் – வெளியீடு!

0
அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியல் - வெளியீடு!
அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியல் - வெளியீடு!
அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியல் – வெளியீடு!

பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் தொடங்கவுள்ள நிலையில் அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகள் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் :

அகில இந்திய மற்றும் உலக அளவில், தொழில்நுட்பக் கல்வியில் முக்கியத்துவம் வாய்ந்தது தமிழகத்தில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகும். இதில் 500 தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்று இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயங்கி வந்த 500 பொறியியல் கல்லூரிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை சரிவர நடைபெறாதது குறிப்பிடத்தக்கது. பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணம் பரவத்தொடங்கியது.

சென்னை: 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு – மாலை நிலவரம்!

பொறியியல் படிப்புக்கு ஏற்ற வேலையின்மை, வளாக வேலை வாய்ப்பில் பெரும்பாலான மாணவர்களுக்கு வேலை கிடைக்காமை போன்ற பிரச்சனைகளால் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் குறைந்தது. இதனிடையே கடந்த 10 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழகத்திலும் வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாதது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 2 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ள நிலையில் சுமார் 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அதில் 10,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!

எனவே 9 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப் போவதாக தெரிவித்துள்ளார். 2 பொறியியல் கல்லூரிகள் ஒரே கல்லூரியாக இணைக்கப்பட்டு விட்டது. இது தவிர 5 கல்லூரிகள் ஏஐசிடிஇயிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. அதன்படி 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது. இதையடுத்து இந்த ஆண்டு 412 கல்லூரிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!