சென்னை: 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு – மாலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மேலும் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நகை வாங்க தக்க சமயம் என்று நகை கடைகளில் குவிந்து உள்ளனர்.
ஆபரணத் தங்கம்:
விலை ஏற்றம், குறைவு போன்ற எந்த சூழலிலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆர்வம் குறையப்போவதில்லை. உலகத்தில் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான பிரியம் எந்த அளவிற்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் தான் சிறந்த முதலீடாகவும் உள்ளது. அவர்களின் கையிருப்புக்கு ஏற்றவாறு தங்கத்தை வாங்கி முதலீடு செய்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!
பொதுவாக சுபமுகூர்த்தம் நிறைந்த மாதம், அட்சய திருதியை மற்றும் நல்ல நாட்களில் மக்கள் அதிக தங்கம் வாங்க வாய்ப்புள்ளதால் அன்றைய தினங்களில் தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும். இதேபோல், பண்டிகை நாட்களிலும் தங்கத்தின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இது போன்ற சிறப்பு நாட்களாக இல்லாமல் இருக்கும் சாதாரண நாட்களில் தங்கத்தில் விலை குறைந்தே காணப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்துள்ளது. இதனால், சவரன் ரூ.34,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,360க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆபரண பிரியர்கள் தங்க நகைகளை வாங்கி பயனடைந்து கொள்ளலாம்.