உலகில் அதிகளவு சம்பளம் பெறும் கால்பந்து வீரர்களின் பட்டியல் – முதலிடத்தில் லயோனல் மெஸ்ஸி!
சமீபத்தில் பார்சிலோனா அணியில் இருந்து PSG அணிக்கு மாறிய பிரபல வீரர் லியோனல் மெஸ்ஸி வாரத்திற்கு சுமார் 1 மில்லியன் GBP சம்பளத்துடன் உலகில் அதிகளவு ஊதியம் பெறும் கால்பந்து வீரர் பட்டியலில் முன்னேறியுள்ளார்.
மெஸ்ஸி சம்பளம்
உலகின் முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் பார்சிலோனா அணியில் இருந்து விலகினார். இதையடுத்து பாரிஸ் நகரில் செயல்பட்டு வரும் PSG அணியுடன் தனது ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ள அவர், தனது கால்பந்து விளையாட்டு வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளார். பார்சிலோனா அணியுடன் ஏற்பட்ட சிறு பிளவு காரணமாக மெஸ்ஸி தனது சிறு வயது கிளப்பை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சனையினால் அவர் தனது சம்பளத்தை பாதியாக குறைக்க முன்வந்தாலும், அவரை ஒரு வீரராக பார்சிலோனா அணி ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழக அரசு பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம் – MLA கோரிக்கை!
இதனால் மெஸ்ஸியின் சேவைகளைப் பயன்படுத்துவதில் PSG இன் நீண்ட கால ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. அந்த வகையில் மெஸ்ஸி பாரிஸை தளமாகக் கொண்ட கிளப்பில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த கிளப்பில் அவருக்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 10 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மாத வருமானம் இந்திய மதிப்பில் 54 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகில் அதிகளவு சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் இவர். இவருக்கு அடுத்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, வாரத்திற்கு 9 கோடி சம்பளத்துடன் மாதத்திற்கு 46 மில்லியன் வரை பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளார்.
TN Job “FB
Group” Join Now
அடுத்ததாக நெய்மர் வாரத்திற்கு 6 கோடி சம்பளத்துடன் 31 மில்லியன் வரை மாத சம்பளமாக பெறுகிறார். நான்காவதாக ஆண்டனியோ கிரீஸ்மென் வாரத்திற்கு 5 கோடி சம்பளத்துடன் மாதம் 29 மில்லியன் சம்பளம் பெறுகிறார். முன்னதாக பார்சிலோனாவில் லியோனல் மெஸ்ஸியின் கடைசி ஒப்பந்ததில், அவர் ஒவ்வொரு ஆண்டும் 98 மில்லியன் பவுண்டுகளை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மெஸ்ஸி PSG அணியுடன் கையெழுத்திட்டதன் மூலம், அந்த அணி நெய்மர், மெஸ்ஸி உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் கையோங்கியுள்ளது. PSG இவர்களை வைத்து UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிகிறது.