தமிழக அரசு பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம் – MLA கோரிக்கை!
பெண்களுக்கு இலவச பஸ் வசதி வழங்கியுள்ளது போல 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இலவசமாக பயணிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலவச பேருந்து பயணம்:
நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியாக பெண்கள் மாநகர பேருந்துகளில் இலவச பயணிக்கலாம் என முதல்வர் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஆண்களுக்கு இந்த சேவை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் சட்டமன்றத்தில் முன்வைத்துள்ளார். “அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படுவது போல், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இலவசமாக மாநகர பேருந்துகளில் பயணிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு – ஒரு சவரன் ரூ.35,664க்கு விற்பனை!
மேலும் அதனை தொடர்ந்து நாகர்கோவில் – களியக்காவிளை வழித்தட சாலையானது நடந்து செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. அதனை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும் சட்டமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்தார்.
TN Job “FB
Group” Join Now
“நாகர்கோவில் – களியக்காவிளை சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வருகிறது. இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை விரைவில் சீரமைக்கப்படும்” என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். ஆனால் எம்எல்ஏ பிரின்ஸ் முன்வைத்த முக்கிய கோரிக்கையான ஆண்களுக்கு இலவச பஸ் வசதி குறித்த கோரிக்கைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட எவரும் விளக்கம் அளிக்கவில்லை.
18 above to 60 below podunga boy babyiku kekranga ticket