Voter ID – Adhaar Number இன்னும் லிங்க் செய்யவில்லையா? கவலை வேண்டாம்!! மத்திய அரசின் விளக்கம்!!
தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நீங்கள் இதுவரை ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கவில்லையெனில் கவலை வேண்டாம். இது தொடர்பாக மத்திய சட்ட மந்திரி கூறியதை பற்றி பார்ப்போம்.
வாக்காளர் அட்டை:
நாட்டில் தேர்தல்களில் வாக்காளர் பதிவுகளை நேர்மையான முறையில் மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தற்போது இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இதற்கு மத்திய சட்ட மந்திரி கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஏற்கனவே இருக்கும் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலமாக வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும். மேலும் தற்போது ஆதார் எண்ணை இணைக்க 6பி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்பாராத நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு.. பள்ளிகள் மூடல்.. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து இவர் கூறியதாவது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் அவரவரின் விருப்பத்தின் பெயரிலானது என்றும் கூறியுள்ளார். ஆதலால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்றும் கூறியுள்ளார். நாட்டில் இதுவரை 54 கோடிக்கு மேற்பட்டவர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.