வீடுகளில் ஆபரண தங்கத்தை வைத்துள்ளீர்களா? உங்களுக்கான வரம்பு இது தான்.. விவரங்கள் இதோ!

0
வீடுகளில் ஆபரண தங்கத்தை வைத்துள்ளீர்களா? உங்களுக்கான வரம்பு இது தான்.. விவரங்கள் இதோ!
வீடுகளில் ஆபரண தங்கத்தை வைத்துள்ளீர்களா? உங்களுக்கான வரம்பு இது தான்.. விவரங்கள் இதோ!
வீடுகளில் ஆபரண தங்கத்தை வைத்துள்ளீர்களா? உங்களுக்கான வரம்பு இது தான்.. விவரங்கள் இதோ!

இந்தியாவில் தங்கம் மற்றும் தங்கத்தால் ஆன அணிகலன்கள் மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும். இந்த நிலையில் நாம் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை அரசு விதித்துள்ளது இது குறித்து இப்பதிவில் காண்போம்.

தங்கம்:

இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் பயன்பாடு எப்போதும் அதிகமாக இருக்கும். இந்திய பெண்கள் தங்கத்தால் ஆன அணிகலன்களை விரும்பி அணிவர். அத்துடன் திருமணத்தின் போது பெண் வீட்டார் அதிக அளவு தங்க நகைகளை வாங்குவது வழக்கம். இவ்வாறு இந்திய மக்களிடையே தங்கம் ஒன்றிணைந்து உள்ள நிலையில் இதன் விலையானது தினந்தோறும் உச்சம் தொட்டு வருகிறது.

இதனால் தங்கம் மற்றும் தங்கத்தால் ஆன நகைகளை வாங்குவது நகைப்பிரியர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் இந்தியாவில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதன் படி ஒரு திருமணமான பெண் வீட்டில் 500 கிராம் வரையில் தங்கத்தை வைத்திருக்கலாம். அதேபோல் திருமணம் ஆகாத பெண் 250 கிராம் வரை தங்கத்தை வைத்திருக்கலாம்.

பொங்கல் பரிசு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – இந்த பொருளையும் சேர்த்து வழங்க கோரிக்கை!

Exams Daily Mobile App Download

இன்றைக்கு ஆண்களும் அதிக அளவில் தங்க அணிகலன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்கள் 100 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அளவை மீறும் போது அரசுக்கு வரி செலுத்த வேண்டியது அவசியம். அதே சேமிப்பில் இருந்து பெறப்பட்ட அல்லது சட்டபூர்வமான வருமானத்தில் இருந்து வாங்கப்பட்ட தங்கத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Offer on TNPSC Mega Test Pack

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!