தமிழகத்தில் மார்ச் 26, 30ம் தேதிகளில் விடுமுறை – கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் மார்ச் 26, 30ம் தேதிகளில் விடுமுறை – கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 26, 30ம் தேதிகளில் விடுமுறை – கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மார்ச் 26, 30ம் தேதிகளில் விடுமுறை – கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தேங்காய் பருப்பு ஏலம் நடத்தப்படுகிறது. ஆண்டு நிறைவு பெறுவதால் வரும் 26, 30 ஆம் தேதிகளில் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை என்று செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

ஏப்ரல் மாதம் ஆண்டு கணக்கு முடிப்பு ஓர் ஆண்டு தொடங்கும் நாள் முதல் இறுதி நாள் வரை நாம் செலவழிக்கும், வரவு வைக்கும் பணம் ஏராளம். இதனால் ஏப்ரல் மாதம் முதல், மார்ச் மாதம் வரையிலான ஆண்டு, நிதியாண்டாக பின்பற்றப்படுகிறது. மேலும் வணிக நோக்கில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், இந்த நிதியாண்டை பின்பற்றுகின்றன. மார்ச் மாதம், 31ம் தேதியுடன், கணக்கை முடித்து, ஏப் 1ல் புதிய கணக்கை துவங்குவர். இருப்பினும் கொரோனா காலகட்டத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு இருந்தது. இதனால், நிதியாண்டு கணக்கு முடிப்பை, ஏப் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ECGC மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும், அவை யாவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மார்ச், 31ல் வழக்கம் போல் கணக்கு முடித்து, ஏப் 1ல் புதிய கணக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வகையில் 2021-2022 ம் ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை அனைத்து நிறுவனங்களும் மேற்கொண்டு வருகிறது. இதனால் அலுவலகங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வரும் 26, 30 ஆம் தேதிகளில் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அச்சங்கம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த செய்தி குறிப்பில் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தேங்காய் பருப்பு ஏலம் நடத்தப்படுகிறது.

இங்கு ஆண்டு கணக்கு இறுதி செய்யும் பணிகள் நடைபெறுவதால் வரும் 26, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. மேலும் ஏப்ரல் 2ஆம் தேதி தேங்காய் பருப்பு ஏலம் வழக்கம்போல நடக்கும். அன்றைய ஏலத்துக்கு தேங்காய் பருப்பு மூட்டைகளை வரும் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலக்கிடங்கில் இறக்கி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04294-220524 என்ற தொலைபேசி எண் அல்லது 9677883302 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!