எகிப்து நாட்டு ராஜா, ராணியாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ பரினா & ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!

0
எகிப்து நாட்டு ராஜா, ராணியாக மாறிய 'பாரதி கண்ணம்மா' பரினா & ரஹ்மான் - வைரலாகும் வீடியோ!
எகிப்து நாட்டு ராஜா, ராணியாக மாறிய 'பாரதி கண்ணம்மா' பரினா & ரஹ்மான் - வைரலாகும் வீடியோ!
எகிப்து நாட்டு ராஜா, ராணியாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ பரினா & ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகை பரினா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இணைந்து எகிப்து நாட்டின் ராஜா, ராணி குடும்பமாக மாறி செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

இன்றைய கால கட்டத்தில் உள்ள இளைஞர்கள் மேக்அப், உடையலங்காரம், சிகை அலங்காரம் ஆகியவற்றில் அதிகளவு ஆர்வம் செலுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் சினிமா மற்றும் சின்னத்திரையில் இருப்பவர்கள் தங்களை அழகாக காட்டி கொள்வதற்காக இப்படிப்பட்ட ஒப்பனைகளை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போதோ தங்களது அழகு மீது அதிக கவனம் செலுத்தி வரும் இளைஞர்கள் இவ்வகையான அலங்காரங்களுடன் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

‘செம்பருத்தி’ ஷபானா முதல் ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா வரை – டாப் 10 சின்னத்திரை குடும்பங்கள்!

அந்த வகையில் இந்த போட்டோஷூட் கலாச்சாரம் திருமணம், அதற்கு முந்தைய நிகழ்வுகள், பிறந்தநாள், குழந்தை பிறப்பு, வளைகாப்பு என நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி சாதாரண மக்களே போட்டோஷூட் புகைப்படங்களில் ஆர்வம் செலுத்தி வர, சினிமா பிரபலங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகை பரினா தனது குழந்தை மற்றும் கணவருடன் சேர்ந்து வித்தியாசமான கெட்டப்பில் ஒரு போட்டோஷூட்டை நடத்தி இருக்கிறார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக் பாஸ் தாமரை – ரசிகர்கள் உற்சாகம்!

அதில் நடிகை பரினா மற்றும் கணவர் ரஹ்மான் இருவரும் எகிப்தில் இருக்கும் ராஜா, ராணி போல தோற்றமளித்துள்ளனர். இவர்கள் தவிர இந்த எகிப்து நாட்டின் குடும்பத்துடன் பரினாவின் குட்டி மகனும் இணைந்திருக்கிறார். இப்போது இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கான மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில், ஒரிஜினல் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. அந்த வகையில் இந்த மேக்கிங் வீடியோவை கண்டு களித்த ரசிகர்கள் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவை, எகிப்து ராணியாக பார்ப்பதற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!