‘செம்பருத்தி’ ஷபானா முதல் ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா வரை – டாப் 10 சின்னத்திரை குடும்பங்கள்!

0
'செம்பருத்தி' ஷபானா முதல் 'ராஜா ராணி 2' ஆலியா மானஸா வரை - டாப் 10 சின்னத்திரை குடும்பங்கள்!
'செம்பருத்தி' ஷபானா முதல் 'ராஜா ராணி 2' ஆலியா மானஸா வரை - டாப் 10 சின்னத்திரை குடும்பங்கள்!
‘செம்பருத்தி’ ஷபானா முதல் ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா வரை – டாப் 10 சின்னத்திரை குடும்பங்கள்!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் ரியல் ஜோடிகளில் அதிகளவு கவனம் பெற்று ட்ரெண்டிங்கில் உள்ள பிரபலங்களில் டாப் 10 இடத்தை பிடித்துள்ளவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ரியல் ஜோடி

பொதுவாக சினிமா அல்லது சீரியல் நடிகர், நடிகைகளை போல அவர்களின் வாரிசுகளும் பிரபலங்களாக இருந்து வருவது வழக்கம். அதுவும் சினிமா துறையை சேர்ந்த இரு பிரபலங்கள் நிஜத்தில் திருமணம் செய்து கொண்டால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும். அந்த வகையில் சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ரீல் ஜோடிகளில் இருந்து ரியல் ஜோடிகளாக மாறி வருகின்றனர். இதனால் திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நட்சத்திர தம்பதிகளை ஒன்றாக பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக் பாஸ் தாமரை – ரசிகர்கள் உற்சாகம்!

இப்போது தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து, காதலித்து, திருமணம் செய்துகொண்டு மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரியல் ஜோடிகளின் டாப் 10 பட்டியல் தற்சமயம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது, மைனா நந்தினி மற்றும் யோகேஷ் ஜோடி தான். சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர்கள் இருவரும் சமீபத்தில் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்குபெற்று பரிசுகளை வென்றிருந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் துருவ் என்ற மகன் இருக்கிறார்.

இவர்களில் நடிகர் யோகேஷ் விஜய் டிவியின் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதே போல நந்தினி விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சினிமாவிலும் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். தவிர நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றில் நந்தினி நடிக்க இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இப்பட்டியலில் அடுத்தபடியாக இருப்பது நடிகை ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஜோடி. இவர்களை போலவே இவர்களின் மகள் ஐலாவும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

இந்த நட்சத்திர ஜோடி வெவ்வேறு டிவி சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தொடர்ந்து விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா தம்பதிக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை ஸ்ரேயா ஜீ தமிழில் ‘ரஜினி’ என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். தொடர்ந்து ‘செம்பருத்தி’ ஷபானா மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஆன நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

அடுத்ததாக கலர்ஸ் டிவி ‘அபி டெய்லர்’ சீரியலின் ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் ஜோடிக்கு அண்மையில் திருமணம் முடிந்தது. இவர்கள் இருவரையும் ரீல் மற்றும் ரியல் ஜோடிகளாக பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து ‘வானத்தை போல’ ஸ்ரீ குமார் மற்றும் ஜீ தமிழின் ‘பேரன்பு’ ஷமிதா இருவரும் மக்களின் மனம் கவர்ந்த தம்பதிகளாக உள்ளனர். இவர்களை தொடர்ந்து ‘கோகுலத்தில் சீதை’ சீரியலின் டான்ஸ் மாஸ்டர் நந்தா மற்றும் ‘இரட்டை ரோஜா’ சாந்தினி ஆகியோர் ரசிகர்களின் ஆஸ்தான ஜோடியாக கருதப்படுகின்றனர்.

‘பாக்கியலட்சுமி’ இனியா நேஹாவின் புதிய கெட்அப்பில் வைரலாகும் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

தொடர்ந்து இப்பட்டியலில் சன் டிவியின் ‘பூவே உனக்காக’ சீரியல் சாயா சிங் மற்றும் ‘தாலாட்டு’ சீரியல் நடிகர் கிருஷ்ணா, ஜீ தமிழின் ‘செம்பருத்தி’ சீரியல் ப்ரியா ராமன் மற்றும் ‘செந்தூரப்பூவே’ சீரியல் ரஞ்சித் ஜோடியும் இடம்பெறுள்ளனர். இவர்களை தொடர்ந்து கடைசியாக இந்த பட்டியலில் இணைந்திருப்பது, ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான விஜே மணிமேகலை மற்றும் ஹுசைன் ஜோடி தான். இவர்கள் இருவரும் தங்களது யூடியூப் சேனல்கள் மூலம் மக்களின் ஏகப்பட்ட ஆதரவுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here