தமிழக பள்ளிகளுக்கான நிலுவை தொகை வழங்க வலுக்கும் கோரிக்கை – முக்கிய தகவல்!

0
தமிழக பள்ளிகளுக்கான நிலுவை தொகை வழங்க வலுக்கும் கோரிக்கை - முக்கிய தகவல்!
தமிழக பள்ளிகளுக்கான நிலுவை தொகை வழங்க வலுக்கும் கோரிக்கை - முக்கிய தகவல்!
தமிழக பள்ளிகளுக்கான நிலுவை தொகை வழங்க வலுக்கும் கோரிக்கை – முக்கிய தகவல்!

தமிழகத்தில் பள்ளிகளுக்கான நிலுவைத்தொகை அந்தந்த கல்வியாண்டில் வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேலூர் மாவட்ட தனியார் மழலையர், தொடக்கப் பள்ளிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நிலுவைத்தொகை

தமிழகத்தில் பள்ளிகளில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு சார்பாக ஒவ்வொரு கல்வியாண்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்ட தனியார் மழலையர், தொடக்கப் பள்ளிகள் நலச்சங்கம் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.

தமிழகத்தில் நாளை (செப்.01) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களான, தமிழகத்தில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு அந்தந்த கல்வியாண்டில் நிலுவை தொகையை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு சுகாதார சான்றிதழ் இணையதளம் வழியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளின் புதுப்பித்தல், கருத்துருக்கள் ஏற்கப்பட்டு சான்றிதழும் இணையதளம் வாயிலாக வழங்க வேண்டும்.

இதையடுத்து தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்க்கையின் போது மாற்றுச்சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அத்துடன் மாற்றுச்சான்றிதழின்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாலா் வகுப்பு, எல்கேஜி, யுகேஜி மாணவா்களுக்கு ஆதாா் எண் இணைக்கத் தடை விதிக்கப்பட வேண்டும். மேலும் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பல ஆண்டுகளாக இயங்கி வரும் டிடிசிபி-இல் இருந்து அரசு விலக்களிக்க வேண்டும் எனவும் இனி தொடங்கும் புதிய பள்ளிகளுக்கு டிடிசிபிக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!