ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

0
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - மத்திய ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - மத்திய ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் மத்திய ரயில்வே மந்திரி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வந்தே ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.

ரயில்வே துறை அறிவிப்பு

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால் அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, ரயில்கள், பேருந்துகள் மற்றும் விமானங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், சில பல தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக பல விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஊரடங்கு அமலாகுமா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

நேற்று ஒடிஷாவின் தலைநகர் புவனேஷ்வர் மாவட்டத்தில் 67வது ரயில்வே விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். ரயில்வே துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்த அனைவருக்கும் விருதுகளை வழங்கிய அமைச்சர் நிருபர்களிடம் ரயில்வே துறை பற்றி பேசினார். கூடுதலாக இந்த நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது, இனி வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் 4 முதல் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இது மட்டுமின்றி இந்தியாவில் கூடிய விரைவில் புல்லெட் ரயில்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அது விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் பொது மக்கள் அனைவருக்கும் மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே இணையமைச்சர் மற்றும் முக்கிய உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here