PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PM Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தொடர்ந்து பலன்களை பெற கட்டாய eKYC பதிவேற்றம் செய்ய வேண்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதற்கான காலஅவகாசம் ஒரு நாள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி கிசான் திட்டம்:

மத்திய அரசானது விவசாயிகளின் நலனுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக பிரதான் மந்திரி சம்மன் நிதி அதாவது கிசான் பென்ஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000 ரூபாய் விவசாயிகளின் நலனுக்காக வழங்கி வருகிறது. இந்த நிலையில் கிசான் பென்ஷன் திட்டத்தின் மூலம் 12வது உதவித் தொகையைப் பெறும் விவசாயிகளின் நலன்களுக்காக ekyc பதிவிற்காக காலக்கெடு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை விரைவில் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி கட்டாய eKYC ஐ முடிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது.இந்த நிலையில் இதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதை அடுத்து இந்த இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளும் தங்களது eKYc யை அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக, தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, முகவரி சரிபார்ப்பு, விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

மேலும் இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, பயனாளர்கள் தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP அடிப்படையிலான EKYC கீழே உள்ள https://exlink.pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பிறகு eKYC பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து ஆதார் எண்-ஐ உள்ளீடு செய்யவும். இதை அடுத்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் 4 இலக்க OTP ஐ பெறுவீர்கள். பின்னர் சமர்ப்பி OTP என்பதைக் கிளிக் செய்யவும். இதை தொடர்ந்து, ஆதார் ஓடிபி எண்ணை உள்ளிடவும். பிறகு உங்கள் ஆதார் எண் பதிவேற்றம் நிறைவடையும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!