தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கு ஹாப்பி நியூஸ் – உணவகங்களின் விபரம் வெளியீடு!

0
தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கு ஹாப்பி நியூஸ் - உணவகங்களின் விபரம் வெளியீடு!
தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கு ஹாப்பி நியூஸ் - உணவகங்களின் விபரம் வெளியீடு!
தமிழக அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கு ஹாப்பி நியூஸ் – உணவகங்களின் விபரம் வெளியீடு!

சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் விரைவுப் பேருந்துகள் நிற்க வேண்டிய 18 உணவகங்கள் பற்றிய விவரங்களை தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை பேருந்து நடத்துனர், ஓட்டுநர் சரியாக பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

போக்குவரத்து நிர்வாகம் வெளியீடு:

தமிழகத்தில் கோவிட்- 19 தாக்கம் காரணமாக ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டன. மேலும் கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வந்தது. மேலும் தமிழக அரசின் கடுமையான நடவடிக்கை காரணமாக கொரோனா தினசரி தொற்று சற்று குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை சீரடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து பயணிகள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 6ம் தேதி முழு ஊரடங்கில் பயணம் செய்ய அனுமதி – SSC CGL தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இந்த வகையில் சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் விரைவுப் பேருந்துகள் நிற்க வேண்டிய உணவகங்கள் குறித்த விவரத்தை, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சென்னையில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் விரைவுப் பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதியாக 18 உணவகங்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில் பயணிகளின் உணவிற்காக உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு தற்போது நிறுத்த பணிமனை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்கள் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

இந்த அறிவிப்பு அடிப்படையில் எந்தவித புகாரும் இல்லாமல் பேருந்துகளை நிறுத்தி செல்ல அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் விவரத்தை துணை மேலாளர் (இயக்கம்) மற்றும் உதவி மேலாளர் (இயக்கம்) கோயம்பேடுக்கு தினசரி அந்தந்த உணவகத்திற்கு மற்றும் உதவி மேலாளர் (இயக்கம்), விழுப்புரம் ஆகியோருக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் தற்போது உளுந்தூர்பேட்டை- விழுப்புரம் இடையே அமைந்துள்ள தனியார் உணவகத்தில் நிறுத்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு பயணிகள் இடையே அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here