24 விரைவு ரயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
24 விரைவு ரயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
24 விரைவு ரயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
24 விரைவு ரயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இந்தியாவில் பயணிகளின் வசதிக்காக 24 விரைவு ரயில்களில் உள்ள ஒரு சில பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவு ரயில்:

ரயில் போக்குவரத்தில் தான் செலவு கம்மி என்பதால் பலரும் ரயிலில் தான் பயணம் செய்ய நினைக்கின்றனர். இந்திய ரயில்வே சேவை திட்டத்தின் மூலமாக தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக சூடுதல் சேவைகளும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் 24 விரைவு ரயில்களின் சேவைகளை மாற்றம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி 4% உயர்வு!

அதாவது, ரயில்களில் முன்பதிவில்லாமல் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தான் அதிகரித்து கொண்டிருக்கின்றனர். இந்த முன்பதிவில்லாமல் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக 24 விரைவு ரயில்களின் தடங்களில் ஒரு சில பெட்டிகள் மட்டும் முன்பதிவில்லாமல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஒரு சில ரயில்களில் மட்டும் சில பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த ரயில்களில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

முதலில், சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு – கர்நாடகா மாநிலம் மங்களூர் செல்லும் விரைவு ரயில், எழும்பூரில் இருந்து – கேரளா மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில், எழும்பூரில் இருந்து – ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து – எழும்பூர் செல்லும் விரைவு ரயில், துாத்துக்குடியில் இருந்து – கர்காடகா மாநிலம் மைசூர் செல்லும் விரைவு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து – நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில்களில் ஒரு சில பெட்டிகள் மட்டும் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here