TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பிற விவரங்கள் இதோ!

0
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பிற விவரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பிற விவரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பிற விவரங்கள் இதோ!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது நிறுவனத்தில் அனுபவமற்ற புதியவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பதிவில் அத்திட்டம் பற்றிய முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம்:

ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2ம் கட்ட பணியமர்த்தலுக்கான திட்டத்தில் அனுபவமற்ற புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிக வரவேற்பு இருந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு – அரசுக்கு கோரிக்கை!

டிசிஎஸ் வளாகத்திற்கு வெளியே பணியமர்த்துவதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். 2ம் கட்ட வேலைவாய்ப்பு திட்டத்தில் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் TCS iON ல் இருந்து அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகாவிரிக்கு தகவல்கள் அனுப்பப்படும்.

TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தலுக்கான தகுதி:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தேர்வுகளில் ஒவ்வொன்றிலும் 60% அல்லது 6 CGPA மதிப்பெண்கள் குறைந்தபட்சம் (அனைத்து செமஸ்டர்களிலும் உள்ள அனைத்து பாடங்களிலும்) பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி – காவல் ஆணையர் உத்தரவு!

மேலும் மாணவர்கள் தங்கள் கல்வியை குறிப்பிட்ட கால இடைவெளியில் முடித்திருக்க வேண்டும். கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை அறிவிப்பது கட்டாயமாகும். ஒட்டுமொத்த கல்வி இடைவெளி அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.

பாடநெறிகள்:

கண்டிப்பாக விண்ணப்பதாரர்கள் முழுநேர படிப்பு முறையில் படித்திருக்க வேண்டும். NIOS (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்) இலிருந்து இடைநிலை அல்லது மூத்த இடைநிலைப் படிப்பை முடித்த மாணவர்களும் மற்ற படிப்புகள் முழுநேரமாக இருந்தால் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். 2 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். டிசிஎஸ் ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறையில் பங்கேற்க மாணவர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரி மூலம் வழங்கப்படும் படிப்பிலிருந்து B.E./B.Tech/M.E./M.Tech/MCA/M.Sc படித்த மாணவர்கள் தகுதியுடையவர்கள்.
  • விண்ணப்பதாரர் பணி அனுபவம் உள்ளவராக இருப்பின் விண்ணப்பதாரர் அனுபவக் கடிதம் / வெளியீட்டுக் கடிதம் / ஆவணங்கள் போன்ற அனுபவம் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும். அதில் முந்தைய அனைத்து நிறுவனங்களுக்கும் நேர்காணலின் போது இணைந்த தேதி மற்றும் வெளியிடப்பட்ட தேதி தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • தற்போதைய நிறுவனத்திற்கு, நேர்காணலின் போது நியமனக் கடிதம் / இணைவுக் கடிதம் போன்ற பணிக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், TCS இல் சேரும் போது உங்களின் கடைசி நிறுவனத்திலிருந்து வெளியீட்டு கடிதம் மற்றும் அனுபவச் சான்றிதழை வழங்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!