தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு – அரசுக்கு கோரிக்கை!

2
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு - அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு - அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 14 % அகவிலைப்படி உயர்வை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் அரசை வலியுறுத்தியுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு:

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் வருடம் தோறும் அகவிலைப்படி உயர்வினை அளித்து வருகிறது. இது மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் மத்திய, மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவில்லை. தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு தற்போது ஊழியர்களுக்கு இரண்டு கட்டமாக அகவிலைப்படி உயர்வினை அளித்துள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி – காவல் ஆணையர் உத்தரவு!

மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு மொத்தம் 24.5 % அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை ஒன்றாம் தேதியை முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Reliance Jio நிறுவனத்தின் Diwali Dhamaka ஆபர் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

இந்த நிலையில் மத்திய அரசை போல தமிழக அரசும், அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி அரசு ஊழியர்கள் சமூக பாதுகாப்பு திட்டமாக கருதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்கள் ஆகியோருக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. I’m Kamali.I have finished BSC computer science.I have an experience in IT Recruiter filed.I give my best to the job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!