Home news தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி – காவல் ஆணையர் உத்தரவு!

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி – காவல் ஆணையர் உத்தரவு!

2
தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி – காவல் ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி - காவல் ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி – காவல் ஆணையர் உத்தரவு!

சென்னையில் தீபாவளி அன்று காலை, இரவு என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பொது போக்குவரத்தில் பட்டாசுகளை எடுத்து செல்லக் கூடாது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு வெடிக்க தடை:

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது தான் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் மக்கள் நலன் கருதி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் நவ.4ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பண்டிகைகள் ஏதும் கொண்டாட அனுமதி வழங்கவில்லை. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது விடுமுறை, பட்டாசு தான். பிறகு தான் புத்தாடை, இனிப்பு வகைகள் அனைத்தும்.

தீபாவளிக்கு முன்னதாக 3% DA உயர்வை பெறும் மத்திய அரசு ஊழியர்களின் விவரங்கள் – முழு பட்டியல் இதோ!

இந்நிலையில் தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஏனென்றால் பட்டாசு வெடிக்கும் புகையினால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிப்பார்கள். இதனை தாண்டி காற்று மாசுபாடு ஏற்படும் என்பதனால் தான் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Reliance Jio நிறுவனத்தின் Diwali Dhamaka ஆபர் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

இந்த தடையை ரத்து செய்ய கோரி பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் எதுவும் பயனளிக்காத வகையில் வீணாகிவிட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் தீபாவளி அன்று காலையில் 6 முதல் 7 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல் இரவு 7 முதல் 8 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுப்போக்குவரத்தில் பட்டாசுகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here