குவைத்தில் மாதம் ரூ.32 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
குவைத்தில் மாதம் ரூ.32 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
குவைத்தில் மாதம் ரூ.32 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
குவைத்தில் மாதம் ரூ.32 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் குவைத் நாட்டுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கு ஒரு மாபெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து காலிப்பணியிடங்களை சேகரித்து வருகிறது. இதன் விளைவாக தற்போது குவைத் நாட்டுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் குவைத் நாட்டில் உள்ள நிறுவனத்திடம் இருந்து குவைத் நாட்டில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலை செய்ய 30 வயது முதல் 40 வயது வரை உள்ள 500 பெண் பணியாளர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

TN TRB 1060 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

இந்த ஒப்பந்தத்தின்படி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.32000 சம்பளமாகவும், அனுபவம் இல்லாதவர்களுக்கு ரூ.29,500 சம்பளமாகவும் வழங்கப்படுகிறது. அத்துடன் மருத்துவப் பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்குட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது 2 ஆண்டு காலம் வரை ஒப்பந்தமாக பணியமர்த்தப்படுகிறார். இது பற்றிய மேலும் விபரங்களை பெற சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை அணுகலாம்.

தமிழக சுகாதாரத்துறையில் 7296 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

இப்பணியில் சேர விருப்பம் உள்ள பெண்கள் தங்களின் சுயவிவரத்தை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இத்துடன் கல்வித்தகுதி மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படம் போன்றவற்றை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 044-225058864, 044-22500417 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள் இந்த மாபெரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here