SBI, HDFC, Kotak Mahindra வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள்!

0
SBI, HDFC, Kotak Mahindra வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள்!
SBI, HDFC, Kotak Mahindra வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள்!
SBI, HDFC, Kotak Mahindra வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள்!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வங்கியில் ஜனவரி 15ம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இதனுடன் HDFC, Kotak Mahindra வங்கிகளில் FDக்கான வட்டி விகிதங்கள் பற்றியும் காணலாம்.

ஸ்டேட் பாங்க்:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதங்களை 10 பிபிஎஸ் வரை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் ₹2 கோடிக்கு குறைவான FDகளுக்கு பொருந்தும் என்றும், புதிய வட்டி விகிதம் ஜனவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. வங்கியின் இணையதளத்தில் 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 5.0 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் – கல்வி இயக்குநர் வலியுறுத்தல்!

மற்ற கால அளவுகளுக்கான FD மீதான வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும். எஸ்பிஐ 5-10 ஆண்டுகள் எஃப்டியில் அதிகபட்சமாக 5.40 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான FD க்கு 5.10 சதவீதமும், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு வட்டி விகிதம் 5.30 சதவீதமும் வழங்குகிறது. இந்த வைப்புத்தொகையில் மூத்த குடிமக்கள் 50 பிபிஎஸ் கூடுதலாகப் பெறுவார்கள்.

HDFC வங்கி:

எச்டிஎஃப்சி வங்கி நிலையான வைப்புத்தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை ஜனவரி 12 முதல் உயர்த்தியுள்ளது. 2 வருடங்கள் முதல் 3 வருடங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைக்கு 5.20%மும், 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 5.40% மும் , 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு 5.60% வட்டி வழங்கப்படும். மற்ற கால அளவுகளுக்கான நிலையான வாய்ப்பு தொகையின் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.

கோடக் மஹிந்திரா வங்கி:

கோடக் மஹிந்திரா வங்கி பல்வேறு தவணைக் காலங்களில் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதமானது ஜனவரி 6ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய உயர்வின் படி, 7 முதல் 30 நாட்கள், 31 முதல் 90 நாட்கள் மற்றும் 91 முதல் 120 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்பு தொகைகளுக்கு முறையே கோடக் மஹிந்திரா வங்கி 2.5%, 2.75% மற்றும் 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள FD களுக்கு 5.15%மும், 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு குறைவாக 5.3% மும், 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் உட்பட 5.3% வட்டியும் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!