![சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் 'கோலங்கள் சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் 'கோலங்கள்' திருச்செல்வம் - ரசிகர்கள் உற்சாகம்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/01/சன்-டிவி-எதிர்-நீச்சல்-சீரியலில்-ரீஎன்ட்ரி-கொடுக்கும்-கோலங்கள்.jpg)
சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘கோலங்கள்’ திருச்செல்வம் – ரசிகர்கள் உற்சாகம்!
விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘எதிர்நீச்சல்’ என்ற புதிய சீரியலின் இயக்குனர், நடிகர், நடிகைகள் குறித்து சில ஸ்வாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பான விவரங்களை இப்பதிவில் காணலாம்.
எதிர்நீச்சல் சீரியல்
சமீப காலமாக முன்னணி தமிழ் டிவி சேனல்கள், பல புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில் டிவி சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ‘கயல்’ என்ற சீரியல் அறிமுகம் செய்யப்பட்டு அது சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மற்றுமொரு புதிய சீரியலை களமிறக்க சன் டிவி திட்டமிட்டுள்ளது. இப்போது, ‘எதிர்நீச்சல்’ என்று பெயரிடப்பட்ட இந்த புதிய சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த சீரியல் குறித்த சில ஸ்வாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை செல்வியின் முதல் வீடியோ – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அதாவது ‘எதிர்நீச்சல்’ சீரியலில் கலைச்செல்வி, இலக்கியா, பானு, ஜனனி என்கிற நான்கு முக்கிய கதாப்பாத்திரங்கள் இடம்பிடித்துள்ளது. இந்த பெண்கள் வாழ்வில் ஜெயிக்க சந்திக்கும் போராட்டங்களை மையமாக வைத்து தான் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இப்போது சன் டிவியில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘தெய்வ மகள்’ சீரியலின் முக்கிய பிரபலம் ஒருவர் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு!
அதாவது ‘தெய்வ மகள்’ சீரியலில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சுப்ரமணியன் இத்தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ‘எதிர்நீச்சல்’ கதையில் இருக்கும் 4 பெண்களில் ஒருவருக்கு ஜோடியாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தவிர சன் டிவியின் ‘கோலங்கள்’ சீரியலை இயக்கிய முக்கிய இயக்குனர் திருச்செல்வம் தான் ‘எதிர்நீச்சல்’ சீரியலை இயக்குபவர் என்பது கவனிக்கத்தக்கது.
இதனால் இந்த புதிய சீரியல் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. தவிர இந்த சீரியலில் பல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது சன் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் வலைதளங்களில் வெளியான இதன் ப்ரோமோ ஒன்று தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.