மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா

0

மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா

அசோகரது மறைவுக்குப் பின்னர், அவரது வாரிசுகளால் மௌரியப் பேரரசைக் கட்டிக் காப்பாற்ற முடியவில்லை. மாகாணங்கள் தங்களது சுதந்திரத்தை அறிவிக்கத் தொடங்கின. வடமேற்கு இந்தியா மௌரியரின் படியிலிருந்த நழுவியது. தொடர்ந்த அயலவரின் தாக்குதலுக்கும் இப்பகுதி ஆளாகியது. கலிங்கும் தனது விடுதலையை பறைசாற்றிக் கொண்டது. அதற்கும் தெற்கே சாதவாகனர்கள் தங்களது சுதந்திர அரசை ஏற்படுத்திக் கொண்டனர். இவற்றின் விளைவாக மௌரியர் ஆட்சி கங்கைச் சமவெளியில் மட்டுமே நடைபெற்றது. விரைவில் அங்கு சுங்க வம்சத்தின் ஆட்சியும் நிறுவப்பட்டது.

சுங்கர்கள்

 • மௌரியர்களின் படைத்தளபதியாக இருந்த புஷ்யமித்ரசுங்கன் என்பவரால் சுங்க வம்சம் நிறுவப்பட்டது. மௌரிய வம்சத்தின் கடைசி அரசரைக் கொன்றுவிட்டு அவர் அரியாணையைக் கைப்பற்றினார்.
 • வடமேற்கு இந்தியாவில் படையெடுத்த வந்த பாக்டிரிய கிரேக்கர்களிடமிருந்து வட இந்தியாவை பாதுகாப்பதே சுங்க ஆட்சிக்கு அப்போது பெரும்; சவாலாக இருந்தது.
 • கிரேக்கர்கள் பாடலிபுத்திரம் வரை வந்து அந்த நகரையும் சிலகாலம் ஆக்ரமித்துக் கொண்டனர். இருப்பினும், புஷ்யமித்ர சுங்கர் விரைந்து செயல்பட்டு இழந்த பகுதிகளை உடனே மீட்டார்.
 • வட இந்;தியாவின்மீது படையெடுத்த கலிங்க நாட்டுக் காரவேலனையும் எதிர்த்து அவர் போரிட்டார்.
 • புஷ்யமித்த சுங்கர் வைதீக பிராமண சமயத்தை ஆதரித்தார். அவர் இரண்டு அஸ்வமேத (குதிரை வேள்வி) யாகங்களைச் செய்தார். புத்த சமயத்தவரை அவர் துன்புறுத்தியாக புத்த சமயச் சான்றுகள் கூறுகின்றன.
 • ஆனால், புத்தசமய கலையை புஷ்யமித்திரர் ஆதரித்தார் என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. அவரது ஆட்சிக் காலத்தில் பார்ஹீத், சாஞ்சி ஆகிய இடங்களிலிருந்த புத்தசமய சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டன.
 • புஷ்யமித்ர சுங்கனுக்குப் பின்னர் அவரது புதல்வன் அக்னிமித்ரன் ஆட்சிக்கு வந்தான். சுங்க வம்சத்தின் கடைசி அரசன் தேவபூதி. அவனது அமைச்சரான வாசுதேவ கன்வன் என்பவரால் தேவபூதி கொல்லப்பட்டார்.
 • கன்வ வம்சம் நிறுவப்பட்டது. அது 45 ஆண்டுகள் நீடித்தது. கன்வர்களின் வீழ்ச்சியிலிருந்து குப்தப்பேரரசு நிறுவப்படும் காலம் வரை மகதத்தின் வரலாறு வெற்றிடமாகவே இருந்தது எனலாம்.
 • கங்கைச் சமவெளியை அயலவர் படையெடுப்பிலிருந்து காப்பாற்றிய விதத்தில் சுங்கர்களின் ஆட்சி முக்கியத்துவம் பெறுகிறது.
 • பண்பாட்டு ரீதியாக நோக்கினால், பிராமண சமயத்தையும், குதிரை வேள்வியையும் சுங்கர்கள் புதுப்பித்தனர். வைணவ சமயத்தையும், குதிரை வேள்வியையும் சுங்கர்கள் புதுப்பித்தனர்.
 • வைணவ சமயத்தையம் வடமொழியையும் சுங்கர்கள் போற்றி வளர்த்தனர். சுருக்கமாகக்; கூறினால், சுங்கர்களின் ஆட்சி வரப்போகும் குப்தர்களின் பொற்கால ஆட்சிக்கு கட்டியம் கூறுவதுபோல அமைந்தது.

சாதவாகனர்கள்

 • மௌரியர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு, தக்காணத்தில் சாதவாகனர்கள் சுதந்திர அரசை நிறுவினார்கள். சுமார் 450 ஆண்டுகள் அவர்களது ஆட்சி நீடித்தது.
 • ஆந்திரர்கள் என்றும் அவர்கள் அழைக்கப்பட்டனர். புராணங்களும் கல்வெட்டுக்களும் சாதவாகனர் வரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாக விளங்கின்றன.
 • கௌதமி புத்ர சதகர்ணி என்பவரின் ஆட்சி பற்றி நாசிக் மற்றும் நானாகாத் கல்வெட்டுக்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சாதவாகனர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் அக்காலத்திய பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறுகின்றன.
 • சாதவாகன வம்சத்தை நிறுவியவர் சிமுகர். அவரைத் தொடர்ந்து கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார். மேற்கில் நாசிக் வரை அவர் பேரரசை விரிவுபடுத்தினார்.
 • மூன்றாவது அரசன் ஸ்ரீசதகர்ணி. மேற்கு மாளவத்தையும் பீரார் பகுதியையும் அவர் கைப்பற்றினார். பின்னர் குதிரை வேள்விகளையும் செய்தார். சாதவாகன வம்சத்தின் பதினேழாவது அரசன் பெயர் ஹாலா.
 • அவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சியிலிருந்தார். சத்தசாய் என்றழைக்கப்படும் கத சப்த சாய் என்ற நூலை ஹாலா இயற்றினார். இதில் பிராகிருத மொழியிலான 700 பாடல்;கள் உள்ளன.
 • சாதவாகன மரபின் மிகச்சிறந்த அரசராக விளங்கியவர் கௌதமிபுத்ர சதகர்ணி. கி.பி. 106 முதல் 130 ஆம் ஆண்டு வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் அவர் ஆட்சி புரிந்தார்.
 • அவரது அன்னை கௌதமி பாலஸ்ரீ வெளியிட்ட நாசிக் கல்வெட்டில் அவரது சாதனைகள் குறிக்கபட்டுள்ளன. கௌதமிபுத்ர சதகர்ணி தக்காணம் முழுவதையும் கைப்பற்;றி பேரரசை விரிவுபடுத்தினார்.
 • மாளவத்தின் அரசர் நாக பாணரை எதிர்த்துப் போரிட்டு அவர் பெற்ற வெற்றி மகத்தானதாகும். அவர் பிராமண சமயத்தை ஆதரித்தார் இருப்பினும் புத்த சமயத்தவருக்கும் கொடைகளை வழங்கினார்.
 • கௌதமிபுத்ர சதகர்ணிக்குப்பிறகு அவரது மகன் வசிஷ்டபுத்ர புலமாயி ஆட்சிக்கு வந்தார். அவர் சாதவாகன ஆட்சியை கிருஷ்ணா நதி முகத்துவாரம் வரை விரிவு படுத்தினார்.
 • அவர் வெளியிட்ட நாணயங்களில் கப்பல் உருவங்கள் பொறிக்கப்ட்டுள்ளன. இதனால் அவரது கடற்படை வலிமையும் கடல்வாணிக வளமையும் வெளிப்படுகிறது. சாதவாகனர்களின் கடைசி முக்கிய அரசர் யக்ஞஸ்ரீ சதகர்ணி.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

பொருளாதார நிலைமை

 • சாதவாகனர் ஆட்சிக் காலத்தில் வாணிகமும் தொழிலும் நன்கு வளர்ச்சியடைந்தன. வணிகர்கள் தங்களது வாணிபத்தைப் பெருக்குவதற்காக வணிகக் குழுக்களை அமைத்துக் கொண்டனர்.
 • குயவர்கள், நெசவுத் தொழில் செய்வோர், எண்ணெய் உற்பத்தியாளர்கள் போன்ற கைவினைஞர்களும் கழகங்களை ஏற்படுத்திக் கொண்டனர் கர்ஷபணம் என்று அழைக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டன.
 • சாதவாகனர்கள் காலத்தில் அயல்நாட்டு வர்த்தகமும் நன்கு செழித்தது. தக்காணத்திலிருந்த பல்வேறு துறைமுகங்களை டாலமி குறிப்பிட்டுள்ளார்.
 • மேற்கு தக்காணத்திலிருந்த கல்யாண் சாதவாகனர்களின் மிகப்பெரிய துறைமுகமாகும். கிழக்குக் கடற்கரையிலிருந்த கண்டகசேலா, கஞ்சம் என்ற துறைமுகங்களும் சிறப்பு வாய்ந்தவை.

பண்பாட்டுக் கொடை

 • சாதவாகனர்கள் பிராமண சமயத்தையும் புத்த சமயத்தையும் ஆதரித்தனர். சைத்தியங்களையும் விகாரங்களையும் கட்டினர்.
 • புத்தசமய துறவிகளுக்கு நிலங்கள் மற்றும் கிராமங்களை மானியமாக வழங்கினர். வசிஷ்டபுத்ரபுலமாயி என்ற அரசர் அமராவதி ஸ்தூபியை செப்பனிட்டார்.
 • நாகார்ஜீனகொண்டாவிலுள்ள அவர்களது கட்டிடக்கலை குறிப்பிடத்தக்கது. பிராமண சமயத்தை மீண்டும் உயிர்ப்பித்த சாதவாகனர்கள் அசுவமேதம் மற்றும் ராஜசூய வேள்விகளையும் நடத்தினர்.
 • பிராகிருத மொழி மற்றும் இலக்கியத்தையும் அவர்கள் ஆதரித்தனர். ஹாலா எழுதிய சத்தசாய் பிராகிருத இலக்கியத்தின் போற்றத்தக்க நூலாக விளங்குகிறது.

வடமேற்கு இந்தியாவில் அயலவர் படையெடுப்புகள்

பாக்டிரியர்கள்

 • கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாக்டீரியா, பார்த்தியா இரண்டும் சிரியாப் பேரரசிலிருந்து விடுதலை பெற்றன.
 • பாக்டிரியாவின் கிரேக்க ஆட்சியாளரான டெமெட்ரியஸ் ஆப்கானிஸ்தான், பஞ்சாப் பகுதிகளைத் தாக்கி கைப் பற்றினார் தட்சசீலத்திலிருந்து அப்போலோடோடஸ், மீனாந்தர் என்ற தமது இரண்டு படைத்தலைவர்களை மற்ற பகுதிகளைப் கைப்பற்றும்படி அனுப்பி வைத்தார்.
 • அப்போலோடோடஸ் சிந்துப்; பகுதியைக் கைப்பற்;றி உஜ்ஜயினிவரை முன்னேறினார். மீனாந்தர் மதுரா வரை தமது ஆட்சியை விரிவுபடுத்தியதுடன் பாடலிபுத்திரத்;தைக் கைப்பற்றவும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், புஷ்யமித்ர சுங்கனின் பேரனான வசுமித்ரன் அவனை எதிர்த்துப் போரிட்டு தடுத்து நிறுத்தினார்.
 • மீனாந்தர், மிலிந்தா என்றும் அழைக்கப்படுகிறார். அவரது தலைநகரம் சாகாலா (சியால்கோட்). அவர் புத்த சமயத்தில் அதிக ஆர்வம் கொண்டார்.
 • புத்த சமயத் துறவி நாகபாணருடன் அவர் உரையாடியது “மிலிந்தபான்ஹோ” (மிலிந்தரின் வினாக்கள்) என்ற பாலிமொழி நூலாகத் தொகுக்கப்பட்டு;ள்ளது.
 • மீனாந்தர் புத்த சமயத்தை தழுவியதோடு பெஸ்நகரில் கருடத்தூணையும் நிறுவினார். மீனாந்தரின் மறைவுக்குப் பின்னரும் நூறாண்டுகளுக்கும் மேலாக கிரேக்கத்தின் தாக்கம் இந்தியாவில் நீடித்தது.

சாகர்கள்

 • சாகர்கள் அல்;லது சைத்தியர்கள் பாக்டீரியா, பார்த்தியா பகுதிகளைத் தாக்கி கிரேக்க ஆட்சியாளர்களிடமிருந்து அவற்றைக் கைப்பற்றினர்.
 • கிரேக்கர்களின் வழிமுறையைப் பின்பற்றி சாகர்களும் தங்களது ஆட்சியை வடமேற்கு இந்தியாவில் மெல்ல விரிவுபடுத்தினர். சாகர்களில்; இரண்டு பிரிவினர் இருந்தனர்.
 • தட்சசீலத்திலிருந்து ஆட்சி செய்த வடக்கு சத்திரப்புக்கள். மற்றொரு பிரிவினர் மகாராஷ்டிரப் பகுதியில் ஆட்சிபுரிந்த மேலைச் சத்திரப்புக்கள்
 • கி.மு. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் சாகர்களின் ஆட்சியை நிறுவியவர் மாவஸ். அவருக்குப்பின் அவரது மகன் முதலாம் ஏசஸ் ஆட்சிக்கு வந்தார்.
 • அவர் விக்ரம் சகாப்தத்தை நிறுவினார் என்ற கருத்தும் உண்டு. தட்ச சீலத்து சத்திரப்புக்களை பார்த்தியர்கள் முறியடித்தனர்.

குஷானர்கள்

 • மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட யூச்சி பழங்குடியின் ஒரு பிரிவினரே குஷானர்கள். அவர்கள் முதலில் சாகர்களை விரட்டிவிட்டு பாக்டிரியாவைக் கைப்பற்றினர்.
 • பின்னர் படிப்படியாக காபூல் பள்ளத்தாக்கு வழியாக முன்னேறி காந்தாரப் பகுதியை கைப்பற்றினர். குஷாண மரபைத் தோற்றுவித்தவர் குஜூலா காட்பிசஸ் அல்லது முதலாம் காட்பிசஸ்.
 • காபூல் பள்ளத்தாக்கை கைப்பற்றிய அவர் தமது பெயர் பொறித்த நாணயங்களை வெளியிட்டார். அவரது புதல்வர் வீமா காட்பிசஸ் அல்லது இரண்டாம் காட்பிசஸ் வடமேற்கு இந்தியா முழுவதையும் கைப்பற்றி மதுராவரை முன்னேறினார்.
 • ‘முழு உலகையும் வென்ற தலைவன்’ என்ற விருதுகள் பொறித்த தங்க நாணயங்களையும் அவர் வெளியிட்டார். அவர் சிறந்த சிவபக்தனாகவும் திகழ்ந்தார்.

கனிஷ்கர் (கி.பி. 78 – 120)

 • குஷாண மரபில் சிறப்புமிக்க ஆட்சியாளர் கனிஷ்கர். கி.பி. 78 ஆம் ஆண்டு தொடங்கும் சாக சகாப்தத்தை அவர் நிறுவினார். அவர் ஒரு பெரும் படையெடுப்பாளர் மட்டுமல்ல, சமயம் மற்றும் கலையைப் போற்றுபவராகவும் திகழ்ந்தார்.

கனிஷ்கரின் படையெடுப்புகள்

 • கனிஷ்கர் ஆட்சிக்கு வந்தபோது அவரது பேரரசில் ஆப்கானிஸ்தான், காந்தாரம், சிந்து, பஞ்சாப் ஆகிய பகுதிகள் இருந்தன.
 • பின்னர், அவர் மகதத்தைக் கைப்பற்றி பாடலிபுத்திரம், புத்தகயா வரை முன்னேறிச் சென்றார். கல்ஹணரின் கூற்றுபு;படி, கனிஷ்கர் காஷ்மீர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார் என்பது தெளிவு.
 • மதுரா, ஸ்வராவஸ்தி, கோசாம்பி, பெனாரஸ் போன்றவிடங்களில் அவரது நாணயங்கள் கண்டெடுக்;கப்பட்டுள்ளன. எனவே, கங்கைச் சமவெளியின்; பெரும்பகுதி அவரது ஆட்சிக்குட்பட்டிருத்தல் வேண்டும்.
 • சீனாவின்மீது படையெடுத்த கனிஷ்கர் அவர்களிடமிருந்து சில பகுதிகiளையும் கைப்பற்றினார். தனது முதல் படையெடுப்பின்போது சீனப் படைத்தலைவர் பாஞ்சோ என்பவரிடம் கனிஷ்கர் தோல்வியடைந்தார்.
 • இரண்டாவது படையெடுப்பின்போது பாஞ்சோவின் புதல்வாரன பான்யாங் என்பவரை முறியடித்தார். அதன் விளைவாக, காஷ்கர், யார்க்கண்ட், கோடான் ஆகிய பகுதிகளை கனிஷ்கர் தமது பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.
 • கனிஷ்கரின் பேரரசு மிகவும் பரந்த ஒன்றாகும். மேற்கில் காந்;தாரம் தொடங்கி கிழக்கே பனாரஸ் வரையிலும், வடக்கில் காஷ்மீர் தொடங்கி தெற்கே மாளவம் வரையும் அவரது பேரரசு பரவியிருந்தது.
 • தற்காலத்தில் பெஷாவர் என்றழைக்கப்படும் புருஷபுரம் என்பது அவரது தலைநகர். அவரது பேரரசில் மற்றொரு சிறப்புமிக்க நகரமாக மதுரா திகழ்ந்தது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

கனிஷ்கரும் புத்த சமயமும்

 • கனிஷ்கர் தமது ஆட்சியில் தொடக்கத்திலேயே புத்த சமயத்தை தழுவினார். இருப்பினும், அவரது நாணயங்களில் புத்தரின் உருவங்கள் மட்டுமல்லாது, இந்து மற்;றும் கிரேக்க கடவுளரின் உருவங்களும் பொறிக்கபட்டிருந்தன.
 • இது கனிஷ்கர் பிற சமயங்கள்மீது கொண்டிருந்த சமய சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. கனிஷ்கரது காலத்தில்தான் மகாயான புத்தசமயம் தோற்றுவிக்கப்பட்டது.
 • புத்தர் நிறுவிய அசோகர் பரப்பிய சமயத்திலிருந்து அது பல்வேறு தன்மைகளில் வேறுபட்டிருந்தது. மலர்கள், ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள், தீபங்கள் கொண்டு புத்தருக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இவ்வாறு, மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடும் சடங்குமுறைகளும் வளர்ச்சிபெற்றன.
 • புதிய சமயத்தை பரப்பும் நோக்கத்தோடு கனிஷ்கர் மத்திய ஆசியா, சீனா போன்ற நாடுகளுக்கு சமயப்பரப்பு குழுக்களை அனுப்பி வைத்தார். பல்வேறு இடங்களில் புத்த சைத்தியங்களும் விஹாரங்களும் கட்டப்ட்டன.
 • வசுமித்திரர், அசுவகோஷர், நாகர்ஜீனர் போன்ற புத்தசமய அறிஞர்களையும் கனிஷ்கர் ஆதரித்தார். புத்த சமயத்திலும் கோட்பாட்டிலும் எழுந்த பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு கனிஷ்கர் நான்காவது புத்த சமய மாநாட்டைக் கூட்டினார்.
 • வசுமித்திரர் தலைமையில், காஷ்மீர் மாகாணம் ஸ்ரீ நகருக்கு அருகிலிருந்த குண்டலவன மடாலயத்தில் இம்மாநாடு நடைபெற்றது. சுமார் 500 துறவிகள் இதில் பங்குகொண்டனர். திரிபீடங்களுக்கு அதிகராபூர்வமான விளக்கவுரை இந்த மாநாட்டில் இறுதி வடிவம் பெற்றது. மகாயான கோட்பாடுகள் முழுவடிவம் பெற்றன.
 • இம்மாநாட்டில் பங்கு பெற்ற அசுவகோஷர் ஒரு தத்துவஞானி, கவிஞர் மற்றும் நாடகாசிரியர். புத்தசரிதத்தின் ஆசிரியர். தென்னிந்தியாவைச் சேர்ந்த நாகார்ஜீனர் கனிஷ்கரின் அவையில் இடம் பெற்றிருந்தார். பண்டைய இந்தியாவின் புகழ்மிக்க மருத்துவரான சரகர் என்பவரையும் கனிஷ்கர் ஆதரித்தார்.

காந்தாரக் கலை

 • வடமேற்கு இந்தியாவிலிருந்த பெஷாவர் மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதியே காந்தாரம் ஏற்பட்து. அப்பகுதியே காந்;தாரக் கலையின் தாயகமாகும்.
 • காந்தாரக் கலையின் மிகச்சிறந்த சிற்பங்கள் கி.பி.முதலிரண்டு நூற்றாண்டுகளில் உருவாக்கப்ட்டன. இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சிக் காலத்தில் காந்தாரக் கலை தோன்றியது என்றாலும், சாகர்களும் குஷானர்களும் காந்தாரக் கலையைப் போற்றி வளர்த்தனர்.
 • இதில் கனிஷ்கரின் பங்கு போற்றத்தக்கதாகும். இந்தியக் கலையும், கிரேக்க – ரோமானியக் கூறுகளும் இணைந்த கலவையே காந்தாரக் கலையாகும்.
 • தட்சசீலம், பெஷாவர் போன்ற வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் காந்தாரக்கலை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
 • புத்தரின் உருவத்தை பல்வேறு வடிவங்களிலும், கோணங்களிலும், அளவுகளிலும் வடித்தமையே காந்தாரக் கலையின் சிறப்பாகும்.
 • புத்தரின் பிறப்பு, அவரது துறவுக் கோலம், போதனைகள் போன்றவை சிற்பங்களாக வடிக்கப்பட்டன.
 • காந்தாரக் கலையின் சிறப்புக் கூறுகள் வருமாறு:
 • மனித வடிவத்தை அதன் தசைகள், மீசையுள்ளிட்ட சிகைமடிப்புகள் தெரியும்படி உருவத்தைப் படைத்தல்
 • தடித்த ஆடைகள் அவற்றின் மடிப்புகள் தெரியும்படி வடிவமைத்தல்
 • அழகான சிற்பங்கள், விவரமான ஆபரணங்கள் மற்றும் அடையாளம் மூலமாக கருத்தை உணர்த்துதல்
 • காந்தாரக் கலையின் முக்கிய கருப்பொருள் – புதிய புத்த சமயப்;பிரிவான மகாயான புத்தசமயக் கோட்பாடுகள் –
 • புத்தர் உருவம் பரிணாம வளர்ச்சிபெற்றது
 • கி.பி. முதல் நான்கு நூற்றாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மடாலயங்கள் கட்டப்பட்டன. பெஷாவர், ராவல்பிண்டி ஆகிய பகுதிகளைச் சுற்;றி மட்டும் பதினைந்து மடலாயங்களின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 • இக்காலத்தில் எழுதப்பப்பட்ட புத்தசமய ஸ்தூபிகளில் கிரேக்க – ரோமானிய கட்டிடக் கலையின் தாக்கத்தை காணமுடிகிறது. ஸ்தூபியின் உயரம் கூடுதலாகவும், அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்தும் இவை அமைக்கப்பட்டன. இதனால், ஸ்தூபிகளின் அழகு மேலும் அதிகரித்தது.

மதுரா கலைப்பாணி

 • தற்கால உத்திரப் பிரதேசத்திலுள்ள மதுரா என்ற இடத்தில் தோன்றி வளர்ந்த கலையே மதுரா கலைப்பாணி என்று அழைக்கப்படுகிறது.
 • கி.பி. முதல் நூற்றாண்டில் அது புகழ்பெற்று விளங்கியது. தொடக்கத்தில் மதுரா கலைப்பாணி தன்னிச்சையாக உள்நாட்டு கலைநயத்துடன் வளர்ச்சி பெற்றது.
 • புத்தரது உருவங்களில் குறிப்பாக அவரது முகம் ஆன்மீகப் பொலிவு நிறைந்து காணப்பட்டது. இத்தகைய பொலிவு காந்தார சிற்பங்களில் காணப்படவில்லை.
 • சிவன் – பார்வதி, விஷ்ணு லட்சுமி உருவங்களும் மதுராவில் செதுக்கப்பட்டன. யகூஷிகள், அப்சரஸ்கள் ஆகிய உருவங்கள் மதுரா கலைப்பாணியின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

கனிஷ்கரின் பின்தோன்ல்களும் குஷானர் ஆட்சியும் முடிவும் 

 • கனிஷ்கருக்குப்பின் ஆட்சிக்கு வந்தோர் சுமார் நூற்றியம்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர். கனிஷ்கரது புதல்வாரன ஹிவிஷ்கர் பேரரசை அப்படியே கட்டிக்காத்தார். அவரது ஆட்சிக் காலத்தில் மதுரா சிறப்பு வாய்ந்த நகரமாகத் திகழ்ந்தது.
 • கனிஷ்கரைப் போலவே, அவரும் புத்தசமயத்தை ஆதரித்தார். குஷானர்களின் கடைசி முக்கிய ஆட்சியாளர் வாசுதேவர். அவரது காலத்தில் குஷான அரசின்பரப்பு குறுகிப் போயிருந்தது.
 • அவரது கல்வெட்டுக்கள் மதுராவைச்; சுற்றியே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர் சிவனை வழிப்பட்டதாகத் தெரிகிறது. வாசுதேவருக்குப் பிறகு, சிறுசிறு குஷான இளவரசர்கள் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி புரிந்தனர்.

மேலும் அறிய PDF பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்…

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்
Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here