கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – இன்று (ஏப்ரல் 15) கடைசி நாள்!!
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2 ஆம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 15) கடைசி நாள் ஆகும்.
மாணவர் சேர்க்கை:
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி இதற்கான கடைசி நாள் ஆகும். இந்நிலையில் 2 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று (ஏப்ரல் 15) கடைசி நாள் ஆகும்.
TN Job “FB
Group” Join Now
இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை பெற 1 ஆம் வகுப்பு மாணவர்கள் https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 2 ஆம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை பெற இணையதளத்தில் உள்ள சேர்க்கை விதிகளை படித்துவிட்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள இடங்கள் அடிப்படையில் விண்ணப்பபதிவு இன்று மாலை 4 மணி வரை நடைபெறும்.
CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு!!
காலியாக உள்ள இடங்களை விட அதிகமாக இடங்கள் கிடைத்தால் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும். 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் மாணவர்கள் பெரும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் அதில் 33 சதவிகித தேர்ச்சி ஒவ்வொரு பாடங்களில் பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலமாக 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழங்கப்படும். 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்ட அட்டவணை படி, 11 ஆம் மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கேந்திரிய வித்யாலயா https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
KENDRA VIDYALAYA SEETS HAD BEEN SOLD OUT WITHIN 2 DAYS OF OPENING.