ஆகஸ்ட் 23 ஆம் தேதி 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 23 ஆம் தேதி 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 23 ஆம் தேதி 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 23 ஆம் தேதி 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் வரும் 23 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கைகள் 2% க்கும் குறைவான கொரோனா பாதிப்புகள் இருக்கும் பகுதிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் 2 சதவீதத்திற்கும் குறைவான கொரோனா நேர்மறை விகிதம் கொண்ட மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

இன்று அறிமுகமாகிறது Ola Electric Scooter – விலை, மைலேஜ் உள்ளிட்ட முழு விபரம்!

இதனிடையே பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வரும் மாணவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பெங்களூர் மாநகரில் மட்டும் 18 வயதுக்குட்பட்ட 543 குழந்தைகள் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய செய்திகள் தெரிவித்துள்ளது. இது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவை கொரோனா 3 ஆம் அலைக்கான சாத்திகூறுகளாக கணிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இயல், இசை, நாடக மன்றத்தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் – முதல்வர் அறிவிப்பு!

அந்த வகையில் 0-9 வயதுடைய 88 குழந்தைகளும், 10-19 வயதுக்குட்பட்ட 305 குழந்தைகளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தான் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மாற்று நாட்களின் அடிப்படையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதுமான தொற்றுநோய் நிலைமையை மறுபரிசீலனை செய்த பின்னர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளை திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!