தமிழக மக்களே இதோ நீங்கள் எதிர்பார்த்த திட்டம் – மாதம் ரூ.1,000 அளிக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை!

0
தமிழக மக்களே இதோ நீங்கள் எதிர்பார்த்த திட்டம் - மாதம் ரூ.1,000 அளிக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை!
தமிழக மக்களே இதோ நீங்கள் எதிர்பார்த்த திட்டம் - மாதம் ரூ.1,000 அளிக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை!
தமிழக மக்களே இதோ நீங்கள் எதிர்பார்த்த திட்டம் – மாதம் ரூ.1,000 அளிக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை!

மாதம் ரூ.1,000 அளிக்கும் அரசின் உதவித்தொகை திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று முதல்வர் பெயரிட்டுள்ளார். மேலும், திட்டம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உரிமைத்தொகை:

தமிழக முதல்வர் மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது இத்திட்டத்திற்காக ரூபாய் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரலதாகவும் முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின் வெளியான அறிவிப்பின்படி மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை அளிக்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயரிட்டு உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

TNPSC CESE தேர்வெழுதியோர் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!

மேலும் பழங்குடியின இதர ஆதரவற்றோர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வேண்டும் என்றும், சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்கள் இந்த திட்டத்தில் பயனடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும், விளிம்பு நிலை மக்களிடம் ஆதார் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவற்றை பெறுவதற்கான ஏற்பாடு செய்து உரிமை தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும், அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!