கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் – ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இருந்து விலகல்!

0
கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் - 'இந்தியன் 2' திரைப்படத்தில் இருந்து விலகல்!
கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் - 'இந்தியன் 2' திரைப்படத்தில் இருந்து விலகல்!
கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் – ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இருந்து விலகல்!

தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால் இத்திரைப்படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக வேறு ஒரு முன்னணி நடிகை நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை காஜல் அகர்வால்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முதல் சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் ஜோடி போட்டுள்ளார். தற்போது 36 வயதாகி இருக்கும் இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ஜீ தமிழ் TRP ரேட்டிங்கில் சாதனை படைத்த ‘சத்யா 2’ சீரியல் – குவியும் வாழ்த்துக்கள்!

இந்த திரைப்பட தயாரிப்பு கொரோனா பரவல் காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக வயதான தோற்றத்தில் காஜல் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது. இப்படி இருக்க கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலதிபரான கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருக்கிறார்.

விஜய் டிவி பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் அவர் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இருந்து விலக இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இப்போது இந்த திரைப்படத்தில் நடிகை காஜலுக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகை நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!