ஜூன் 23ம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – அரசு அதிரடி உத்தரவு!

0
ஜூன் 23ம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - அரசு அதிரடி உத்தரவு!
ஜூன் 23ம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - அரசு அதிரடி உத்தரவு!
ஜூன் 23ம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – அரசு அதிரடி உத்தரவு!

பர்னாலா, சங்ரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வாரியங்கள்/கார்ப்பரேசன்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூர் மாவட்டத்தில் உள்ள துரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து பகவந்த் மான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது. இதனால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேவல் சிங் தில்லானையும், ஆம் ஆத்மி கட்சி குர்மெயில் சிங்கையும் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – இதெற்கெல்லாம் தடை! அரசு அறிவிப்பு!

இந்நிலையில்,பஞ்சாப் அரசு இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதன்படி எந்த ஒரு அரசு அதிகாரி அல்லது பணியாளர், சங்ரூர், பர்னாலா மாவட்டத்தின் வாக்காளராகவும், மலேர்கோட்லா மாவட்டத்தின் 105-மலேர்கோட்லா சட்டமன்றத் தொகுதியின் வாக்காளராகவும், பஞ்சாப் அரசு அலுவலகங்கள், வாரியங்கள்/கார்ப்பரேஷன்கள் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவராகவும் இருந்தால், ஜூன் 23, 2022 அன்று (வியாழன்) அவர் தனது வாக்காளர் அட்டையை சமர்ப்பித்து வாக்களிப்பதற்காக சிறப்பு விடுப்பு எடுக்கலாம். இந்த விடுப்பு அலுவலர்/ பணியாளர்களின் விடுப்புக் கணக்கில் இருந்து கழிக்கப்படாது.

Exams Daily Mobile App Download

ஜூன் 23, 2022 அன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 135-பி இன் துணைப்பிரிவு 1 இன் விதியின்படி, மாவட்டம் சங்ரூர், பர்னாலா மற்றும் மலேர்கோட்லா மாவட்டத்தின் 105-மலேர்கோட்லா சட்டமன்றத் தொகுதியிலும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு எந்த நிறுவனத்திலும் பணிபுரியும் அனைத்து நபர்களையும் பணி புரிய வற்புறுத்தக்கூடாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here