நடப்பு நிகழ்வுகள் – 10 ஜூன் 2023
தேசிய செய்திகள்
இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடல்சார் கூட்டு பயிற்சியை தொடங்குகின்றன.
- இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமானது கடல்சார் கூட்டாண்மை பயிற்சியின் முதல் பதிப்பை ஓமன் நாட்டின் வளைகுடாவில் ஜூன் 07 அன்று தொடங்கியுள்ளது.
- இந்த முதல் பயிற்சியானது மூன்று கடற்படைகளுக்கு இடையேயான “முத்தரப்பு ஒத்துழைப்பை” மேம்படுத்துவதையும், கடல்சார் சூழலில் நீண்டகால மற்றும் தற்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நோக்கமாக கொண்டு அமைந்துள்ளதாகும். இந்த பயிற்சியானது 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நீர் வளங்களுக்கான 2 ஆண்டு செயல் திட்டம் அறிமுகம்.
- இரண்டு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த நீர் வளங்கள் சம்பத்தப்பட்ட செயல் திட்டத்தை(2023-25) ஹரியானா முதல்வர் ஜூன் 9 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
- 4 முக்கிய துறைகளின்கீழ் இத்திட்டத்தின்படி, 2 ஆண்டுகளில் 49.7 சதவீத தண்ணீரை சேமிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளன. நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் நீர் தேங்குதல் ஆகிய சவால்களை தீர்ப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வர்த்தகத்திற்கான இலக்கை 320 மில்லியன் யூரோவிலிருந்து ஒரு பில்லியன் யூரோவாக நிர்ணயிக்க முடிவு.
- இந்தியா மற்றும் செர்பியாவின் வர்த்தகத்தை இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இலக்கை “320 மில்லியன் யூரோவிலிருந்து ஒரு பில்லியன் யூரோவாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ஜூன் 8அன்று செர்பிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இந்த ஒப்புதல் மூலம் இருநாட்டு உறவுகள் மேலும் வலுப்படும் எனவும் உலக பொருளாதார வளர்ச்சிக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IICA மற்றும் NALSAR ஆகியவை “LL.M இன் தீர்க்கப்படாத மற்றும் திவால் சட்டங்களுக்கான” திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது.
- ஐதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் நிறுவனமானது (IICA) புது தில்லியில், LL.M இன் தீர்க்கப்படாத மற்றும் திவால் சட்டங்களில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த திட்டத்தின் மூலம் IBC இல் சிறந்த கல்வியாளர்கள், அறிவியல் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமேசான் கிசான் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்திய வேளாண் ஆராய்ச்சி அமைப்பானது(ICAR) அமேசான் கிசானுடன் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக புது டெல்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தம் மூலம் அமேசான் நெட்வொர்க் ஆனது விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பின்னணியை வழங்கும் என்றும் இது விவசாயிகளுக்கு உகந்த மகசூல் மற்றும் அவர்களின் மேம்பாட்டு வருமானத்திற்காக பல்வேறு பயிர்களை அறிவியல் முறையில் வளர்க்க உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IICA மற்றும் RRU இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- IICA மற்றும் RRU ஆகியவை “கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும், அறிவு மற்றும் வளங்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூன் 9,2023 அன்று கையெழுத்திட்டுள்ளன.
- நிதிக் குற்றங்கள் தடுப்பு, சட்ட அமலாக்கம், உள் பாதுகாப்பு, கார்ப்பரேட் மோசடிகள் தடுப்பு மற்றும் கல்வி திறன் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்
1.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு.
- சுமார் 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் “பண்டைய நீர்வழிகளில் வாழ்ந்த உயிரினங்களின் புதைபடிவங்களானது” ஆஸ்திரேலியா நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கடலின் பாறைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த கண்டுப்பிடிப்பானது 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் மூதாதையர்களின் யூகாரியோடிக் செயல்முறையை கண்டறிய முடியும் மற்றும் இந்த கண்டுபிடிப்பானது நமது ஆரம்பகால மூதாதையர்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் புரிதலை மாற்றக்கூடியதாக அமையலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநில செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தின் “மாவட்ட நல்லாட்சி குறியீடு” (DGGI) வெளியிடப்பட்டுள்ளது.
- DARPG மற்றும் அரசு அருணாச்சலப் பிரதேசத்தின் அறிவுக் கூட்டாளர் CGG, ஹைதராபாத் ஆகியவை இணைந்து “அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் மாவட்ட நல்லாட்சி குறியீட்டை” ஜூன்8, 2023 அன்று வெளியிட்டுள்ளது.
- இந்த குறியீடானது பலதரப்பட்ட 7 சுற்று சந்திப்புகளுடன் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு வடிவமைக்கப்பட்டுள்ளது என அருணாச்சல பிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குறியீடானது அருணாச்சலப் பிரதேசத்தின் மாவட்டங்களை மேற்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பிரிவுகள் என பிரிவு வாரியாக தரவரிசைப்படுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்புக் குறியீடு 2022-23 இல் ஜம்மு & காஷ்மீர் முதல் இடத்தை, தொடர்ந்து மூன்றாவது முறையாக பெற்றுள்ளது.
- இந்த ஆண்டுக்கான உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் யூனியன் பிரதேசம் (UT) பிரிவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆனது, முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.
- ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆனது 2021 மற்றும் 2022ஐ தொடர்ந்து 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக மூன்றாவது விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே சமயத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக Eat Right Mela மாவட்டங்களைக் கொண்ட பகுதியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆனது முதல் பரிசை வென்றுள்ளது.

புது டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணத்தை எளிதாக்கும் வகையில் “டிஜி-யாத்ரா” என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- புது டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணத்தை எளிதாக்கும் வகையில் “டிஜி-யாத்ரா” என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த முன்னெடுப்பானது IGI விமான நிலையத்தின் பகுப்பு 3இல்(Terminal 3) “எளிய மூன்று-தள பதிவு செயல்முறை” மூலம் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த தொடங்கப்பட்டதாகும். இந்த முன்னெடுப்பின் மூலம் பயணிகள் “தொடக்க முனையம், பாதுகாப்பு சோதனை பகுதி மற்றும் போர்டிங் வாயில்” ஆகியவற்றிற்குள் தடையின்றி பயணிக்க முடியும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
FSSAIயின் “Eat Right Challenge” – இரண்டாம் கட்ட பதிப்பின் 231 மாவட்டங்களில் “கோவை” முதலிடத்தை பிடித்துள்ளது.
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ‘ஈட் ரைட் சேலஞ்ச் – இரண்டாம் பதிப்பில்’ 231 மாவட்டங்கள் பட்டியலில் “கோவை மாவட்டமானது” முதலிடத்தை பிடித்துள்ளது.
- அதாவது மே 2022 முதல் நவம்பர் 15, 2022 வரை நடைபெற்ற மதிப்பீட்டில் கோவை மாவட்டமானது மொத்தம் 200க்கு 196 புள்ளிகளைப் பெற்று இந்த இடத்தை தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசு ITI நிலையங்களில் “தமிழில் பாடப் புத்தகங்கள் அளிக்கும் திட்டம்” தொடக்கம்.
- தமிழகத்தில் 71 அரசு தொழில்நுட்ப மையங்கள் அமைத்ததோடு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கு தமிழில் பாடப் புத்தகங்கள் அளிக்கும் திட்டத்தை ஜூன் 08 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
- தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் படிக்க பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள் இதுவரை ஆங்கில மொழியில் இருந்து வந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை வைத்த கோரிக்கையின் படி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் தமிழில் பாடப் புத்தகங்கள் அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தை முதல்வர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரகடத்தில் ஜூன் 8 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
பொருளாதார செய்திகள்
ரூபே முன்கூட்டியே பணம் செலுத்தக்கூடிய FOREX அட்டைகளை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
- வெளிநாடுகளில் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு அதிக கட்டண விருப்ப சலுகைகளை வழங்கும் முயற்சியில், இந்திய ரிசர்வ் வங்கியானது(RBI) அனைத்து இந்திய வங்கிகளுக்கும் ரூபே முன்கூட்டியே பணம் செலுத்தக்கூடிய FOREX அட்டைகளை(RuPay Prepaid FOREX Cards) வழங்க முடிவு செய்துள்ளது.
- இந்த கார்டுகளை ஏடிஎம்கள், விற்பனை செய்யும் இடம்(PoS) இயந்திரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இணையதள வணிகர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என RBI அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரங்கல் செய்திகள்
தமிழ்ச் செம்மல் ஆ. சிவராமகிருஷ்ணன் (93) காலமானார்.
- தமிழுக்கு பல்வேறு தொண்டுகளை மேற்கொண்டவரும், தென்காசி திருவள்ளுவர் கழக செயலருமான ஆ. சிவராமகிருஷ்ணன் (93), உடல்நலக் குறைவின் காரணமாக ஜூன் 8 அன்று காலமானார்.
- ராஜபாளையம் திருவள்ளுவர் மன்றத்தின் “திருக்குறள் தொண்டர், மணப் பாறை திருக்குறள் பயிற்றகத்தின் ‘திருக்குறள் பணிச்செம்மல்’, சென்னைத் தமிழ்ச் சுரங்கத்தின் ‘தமிழ் மாமணி, நெல்லை துணி வணிகர் இலக்கிய வட்டத்தின் ‘இலக்கியச் செம்மல்’ ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார். தமிழக அரசு சார்பில் இவருக்கு 2022ஆம் ஆண்டு டிசம்பர் 21இல் ‘தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய தினம்
உலக அங்கீகார தினம் 2023
- உலக அங்கீகாரத்தின் மதிப்பை ஊக்குவிக்கவும் அதன் உன்னத பணியை மதிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 09 அன்று உலக அங்கீகார தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாளானது ILAC மற்றும் IAF ஆல் நிறுவப்பட்டது. அங்கீகாரம்: உலகளாவிய வர்த்தகத்தின் எதிர்காலத்தை ஆதரித்தல்(Accreditation: Supporting the future of global trade) என்பது இந்த ஆண்டிற்க்கான கருப்பொருளாகும்.