நடப்பு நிகழ்வுகள் ஜூலை 6, 2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 6, 2018

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

யுனெஸ்கோ விரைவில் ஆந்திராவில் விளையாட்டிற்கான  பல்கலைக்கழகத்தை அமைக்கிறது

  • ஐ.நா வின் சிறப்பு நிறுவனமான யுனெஸ்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும் விளையாட்டிற்கான டிசைன் பல்கலைக்கழகம் விரைவில் விசாகப்பட்டினத்தில் திறக்கப்படும்.

ஒடிசா

வரையறுக்கப்பட்ட உயரமான சுரங்கப்பாதை – சம்பல்பூர் பிரிவு

  • கிழக்கு கடற்கரை இரயில்வே ஒரே நாளில், சம்பல்பூர் பிரிவில் இரண்டு நிலையங்களுக்கு இடையே 06 வரையறுக்கப்பட்ட உயரமான சுரங்கப்பாதை அமைத்தது
  • முதன்முதலாக இந்திய இரயில்வேயில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங் கேட்டையும் அகற்றியது சம்பல்பூர் பிரிவு.

ராஜஸ்தான்

WIPO ஆதரவு மையம் ஜெய்ப்பூரில் அமையவுள்ளது

  • உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) விரைவில் காப்புரிமை தரவுத்தளத்தை அணுகுவதற்காக ஜெய்ப்பூரில் ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆதரவு மையத்தை (TISCs) திறக்கும்.

கேரளம்

இரயில் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சிறிய போர்ட்டபிள் அமைப்பு

  • அச்சிடப்பட்ட அட்டை டிக்கெட்டுக்கள் மற்றும் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுக்களை நீக்குவதற்கும் தடையற்ற டிக்கெட்களை வழங்குவதற்கும் குறைந்த விலை போர்ட்டபிள் டிக்கெட் அமைப்பை (பி-யுடிஎஸ்) தெற்கு ரயில்வே உருவாக்கியுள்ளது.

டெக்னோ பார்க்கில் வணிக மையம் அமைக்கத் திட்டம்

  • திருவனந்தபுரம் டெக்னோபார்க்கில் எர்ன்ஸ்ட் & யங் (EY) உலகளாவிய வணிக மையம் அமைக்கத் திட்டம்.

கர்நாடகம்

பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உருவாக்க தகவல் மையம்

  • இயற்கை பாதுகாப்பு கழகத்தால் நிறுவப்பட்ட இயற்கை தகவல் மையம் உள்ளூர் சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இது பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளின் எல்லைகளின் மீது வாழும் உள்ளூர் சமூகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயன் அளிக்கும். இது சாமராஜநகர் மாவட்டதிலுள்ள கொல்லேகல் தாலுக்கான எல்லமலா கிராமத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.

சர்வதேச செய்திகள்

இலங்கையில்உலகின் மிக நஷ்டமான விமான நிலையத்தைஇந்தியா வழிநடத்த முடிவு

  • ஹம்பன்டோட்டாவில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இழப்புக்களிலிருந்து  மீட்பதற்கு இலங்கையுடன் கூட்டு முயற்சியை மேற்கொள்வதற்கு இந்தியா உடன்பட்டு முடிவு.

மாநாடுகள்

இ-வர்த்தகம் பணிக்குழுவின் முதல் கூட்டம்

  • வர்த்தக செயலாளர் ரிதா தியோதியா புதுதில்லியில் இ-வர்த்தக பணிக்குழுவின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 20 – 22 ஜூன், 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துணை குழு கூட்டத்தில் இருந்து வந்த கருத்துக்களின் அடிப்படையில் கூட்டம் நடந்தது.

சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் சர்வதேச மாநாடு

  • பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடந்த எட்டாவது சர்வதேச சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU),ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

NSGக்கும் IRCTCக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது  

  • ரயில்வே வாரண்டுகளுக்கு பதிலாக மின் டிக்கெட்டை தேர்ந்தெடுக்கும் முதல் துணைராணுவப் படை, தேசிய பாதுகாப்புப் படை(NSG) ஆகும்.

விருதுகள்

இசை சங்கம் மூலம் கடம் மேதைக்கு விருது

  • H. விநாயகம் (‘விக்குவிநாயகம்) – சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

ஜிஎஸ்டி ‘Verify App’

  • நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக ‘GST Verify’ என்ற மொபைல் ஆப்பை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் (CBIC) உருவாக்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

திபிலிசி  கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்தம்

  • ஜோர்ஜியாவில் நடந்த திபிலிசி கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா வென்று சாம்பியன் ஆனார், 86kg பிரிவில் தீபக் பூனியா வெண்கலத்தை வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!