நடப்பு நிகழ்வுகள் – 2 ஜூலை 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 2 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் - 2 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் – 2 ஜூலை 2023

தேசிய செய்திகள்

இந்தியாவின் குறைந்த கார்பன் ஆற்றல் துறையை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் டாலர் கடனுக்கு உலக வங்கியானது ஒப்புதல் அளித்துள்ளது.

  • இந்தியாவின் குறைந்த கார்பன் ஆற்றல் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்தலுக்காக 1.5 பில்லியன் டாலர் கடன் நிதியுதவிக்கு உலக வங்கியானது (WB) ஜூன் 30 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • 2030 ஆம் ஆண்டிற்குள் தனியார் துறை முதலீட்டில் 100 பில்லியன் டாலர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட நாட்டின் “தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கு இந்தத் நிதியுதவியானது உதவும் என உலக வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

உலக பாரம்பரியத்தின் மீதான கண்காட்சி வங்கியை MoS மீனாட்சி லேகி புது டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார்.

  • யுனெஸ்கோவின் பட்டியலிடப்பட்ட உலக பாரம்பரிய தளங்களைக் கொண்ட G20 உறுப்பு நாடுகளின்,  அதிகாரவப்பூர்வ ரூபாய் நோட்டுகளின் பாரம்பரியத்திற்கான வங்கிக் கண்காட்சியை கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி ஜூலை 01 அன்று புது டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் இந்த மாதம் ஒன்பதாம் தேதி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் G20 நாடுகளில் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியத்தில் 70 சதவிகிதம் இருப்பதாகவும் அவற்றின் பெருமையை உலக அரங்கத்திற்கு காட்டுவதற்கான ஒரு தலமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் கனடா இடையே சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவையானது தொடக்கம்.

  • இ-காமர்ஸ் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில்இந்தியா மற்றும் கனடா இடையே சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவை(ஐடிபிஎஸ்) என்ற முறையை அறிமுகப்படுத்துவதற்காக, கனடா அஞ்சல் துறையுடன் இந்திய அஞ்சல் துறையானது சமீபத்தில் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 
  • இந்த சேவையானது ஜூலை 01, 2023 முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறு குறு நடுத்தர வணிகர்களின் இ-காமர்ஸ் பொருட்களை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எளிதாக கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தினை மேம்படுத்த “தகவல் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய வழிகாட்டுதல்களை” CERT வெளியிட்டுள்ளது.

  • 80 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் இணையம் மற்றும் சைபர்ஸ்பேஸை தீவிரமாகப் பயன்படுத்துவதால், இந்தியாவின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) வணிகம், கல்வி, நிதி மற்றும் டிஜிட்டல் அரசாங்க சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • பாதுகாப்பான சைபர்ஸ்பேஸின் இலக்கை மேலும் வலுப்படுத்தி அதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்யும் என மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகமானது தெரிவித்துள்ளது. அனைத்து அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு சாரா நிறுவனங்களையும் அவற்றின் நிர்வாக எல்லையையும் இந்த முன்னெடுப்பின் கீழ் கொண்டு வருகிறது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கடல்சார் கூட்டு பயிற்சி தொடக்கம்.

  • இந்திய பெருங்கடல் பகுதியில் வலுவான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய  கடற்படை மற்றும் பிரான்ஸ் நாட்டின் கடற்படையானது ஜூன் 30 அன்று விசாகப்பட்டினத்தில் ஒரு கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை (MPX) மேற்கொண்டுள்ளன.
  • இந்த பாதுகாப்பு பயிற்சியில் வங்காள விரிகுடாவில் ஜூன் 30 அன்று பிரெஞ்சு கடற்படைக் கப்பலான FS Surcouf உடன் INS ராணா மற்றும் எதிரி நாட்டின் ஏவுகணை அழிக்கும் கப்பலான INS சுமேடா மற்றும் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட கடல் ரோந்துக் கப்பல்கள் இணைந்து கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளன. 

சர்வதேச செய்திகள்

உக்ரைனுக்கு $1.5 பில்லியன் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு உலக வங்கியானது ஒப்புதல் அளித்துள்ளது. 

  •  உக்ரைனில்  நிலவி வரும் கடும் போர் பதட்ட சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையிலும் அவர்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு மேம்பாட்டுக் கொள்கை கடனான(DPL) 1.5 பில்லியன் அமெரிக்கா டாலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • உக்ரைன் அறக்கட்டளை நிதியத்திற்கான முன்னேற்றத்திற்கு இந்த கடனானது மிகவும் பயனுள்ளதாகவும் உதவிகரமாகவும் அமையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

மாநில செய்திகள்

விழித்திரை உச்சி மாநாடு 2023 – தொடக்கம்.

  • சங்கர நேத்ராலயாவின் ஐந்தாவது ஆண்டு விழித்திரை உச்சி மாநாடு 2023 ஆனது ஜூன் 30 அன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • தி இந்து குழுமத்தின் இயக்குநர் என் ராம் மற்றும் சன்மார் இணை குழுமத்தின் துணைத் தலைவர் என் குமார் ஆகியோரின் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த மாநாடானது மாகுலர் அறுவை சிகிச்சையில் கவனம் செலுத்துவதை மேம்படுத்துவதை கருப்பொருளாக கொண்டு இந்த மாநாடானது நடைப்பெறுகிறது.

2023 நிதியாண்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

  • 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏற்றுமதித் தரவுகளின்படி, தமிழ்நாடு (TN) இந்த ஆண்டிற்க்கான இந்தியாவின் முன்னணி மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. 
  • அதாவது கிட்டத்தட்ட ஏற்றுமதியானது USD 5.37 பில்லியன் மதிப்பில் முதலிடத்திலும், USD 4.90 பில்லியன் மதிப்பிலான ஏற்றுமதியுடன் 2வது இடத்தில் உள்ள உத்தரப் பிரதேசமும், USD 4.52 பில்லியன் உடன் கர்நாடகா 3வது இடத்திலும் உள்ளது.

ராய் வில்வித்தை சங்கத்திற்கு சிக்கிம் மாநில முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

  • சிக்கிம் மாநில முதல்வர் பிஎஸ் தமாங் ஜூன் 30 அன்று,  நாம்சி மாவட்டத்தின் போக்லோக் கம்ராங் தொகுதியில் உள்ள கிட்சுடும்ராவில் “தருண்தீப் ராய் வில்வித்தை” சங்கத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிம்பியன் வில்வீரரான தருண்தீப் ராய் அவர்களின் பெயரில் இந்த சங்கமானது ரூபாய் 30.4 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. மேலும் இது சிக்கிம் மாநிலத்தின் விளையாட்டு திறனை உலக அரங்கிற்கு எடுத்து செல்வதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இந்தியாவின் துணை தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா மீண்டும் நியமனம்.

  • இந்தியாவின்  துணை தலைமை வழக்குரைஞராக துஷார் மேத்தாவை மீண்டும் நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவானது ஜூன் 30 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் தலைமை வழக்குரைஞருக்கு அடுத்தபடியாக இரண்டாவது மூத்த சட்ட அதிகாரி சொலிசிட்டர் ஜெனரல் (துணை தலைமை வழக்குரைஞர்) ஆவார்.
  • இவரோடு விக்ரம்ஜித் பானர்ஜி,  பல்பீர் சிங், கே.எம்.நடராஜ், எஸ்.வி.ராஜு, ஐஸ்வர்யா பாடி மற்றும் என்.வெங்கடராமன்  ஆகிய ஆறு உயர் சட்ட அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மீண்டும் நியமிக்கவும் இந்த ஒப்புதலில் அமைச்சரவையின் நியமனக் குழு குறிப்பிட்டுள்ளது.

விருதுகள்

மேரி கோம் அவர்களுக்கு இங்கிலாந்தின் குளோபல் இந்தியன் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது. 

  • இந்திய விளையாட்டு ஜாம்பவான் மற்றும் பெண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மேரி கோம் அவர்களுக்கு, இங்கிலாந்தின் வின்ட்சரில் இந்த ஆண்டுக்கான U.K.- இந்தியா விருதுகளில் குளோபல் இந்தியன் ஐகான் என்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  • 40 வயதான மற்றும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரான இவர், ஜூன் 29 அன்று இரவு நடந்த இந்த விருது வழங்கும் விழாவில், இங்கிலாந்திற்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமியிடமிருந்து இந்த மதிப்பிற்குரிய விருதை பெற்று கொண்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

நட்சத்திர இந்திய ஈட்டி எறிதல் வீரர் லாசன்னே டயமண்ட் லீக் பட்டத்தை வென்றுள்ளார்.

  • நட்சத்திர இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா 2023 லொசேன் டயமண்ட் லீக் போட்டியின் இறுதி சுற்றில் 87.66 மீட்டர் தூரம் எறிந்து மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.
  • இந்த இறுதி போட்டியில் நீரஜ் 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தையும், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 87.03 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தையும், செக் நாட்டின் ஜக்குப் வாட்லெச் 86.13 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய ஜோடி வென்றுள்ளது.

  • சீனாவின் ஹுவாங்சோவில் ஜூன் 30 அன்று நடைப்பெற்ற ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கால் கார்த்திக் மற்றும் ஹரிந்தர்பால் சிங் சந்து ஜோடியானது மலேசிய ஜோடியான இவான் யுவன் மற்றும் ரேச்சல் அர்னால்ட் ஜோடியை 11-10, 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
  • இந்த இறுதி போட்டியில் இந்திய ஜோடியானது மலேசிய ஜோடியான இவான் யுவன் மற்றும் ரேச்சல் அர்னால்ட் ஜோடியை 11-10, 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரங்கல் செய்திகள்

ஆஸ்கார் விருதை வென்ற நடிகர் “ஆலன் அர்கின்” காலமானார்.

  • “லிட்டில் மிஸ் சன்ஷைன்” என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பு திறனுக்காக ஆஸ்கார் விருதை வென்ற நடிகர் ஆலன் ஆர்கின், தனது 89வது வயதில் ஜூன் 29 2023 அன்று காலமானார்.
  • இவருக்கு 2006 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதானது “லிட்டில் மிஸ் சன்ஷைன்” என்ற படத்தின் மூலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

தேசிய மருத்துவர்கள் தினம் 2023

  • மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவை செய்யும் அனைத்து மருத்துவர்களின் உன்னதத்தை போற்றும் வகையில் இந்த உலக மருத்துவர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 01 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாளைக் போற்றுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • Celebrating Resilience and Healing Hands என்பது இந்த ஆண்டிற்க்கான கருப்பொருளாகும்.

தேசிய பட்டய கணக்காளர் தினம் 2023

  • 1949 இல் இந்தியாவின் பாராளுமன்றத்தில், அரசியலமைப்பின் மூலம் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில்  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 அன்று தேசிய பட்டய கணக்காளர் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • ‘Empowering Financial Excellence’ என்பது இந்த ஆண்டிற்க்கான கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!