யோனா SBI சேவை மூலம் வங்கிக்கணக்கு திறப்பு – சிறப்பம்சங்கள் வெளியீடு!

0
யோனா SBI சேவை மூலம் வங்கிக்கணக்கு திறப்பு - சிறப்பம்சங்கள் வெளியீடு!
யோனா SBI சேவை மூலம் வங்கிக்கணக்கு திறப்பு - சிறப்பம்சங்கள் வெளியீடு!
யோனா SBI சேவை மூலம் வங்கிக்கணக்கு திறப்பு – சிறப்பம்சங்கள் வெளியீடு!

இந்தியாவில் இருந்து யுனைடெட் கிங்டம் (UK) நாடுகளுக்கு குடியேற திட்டமிட்டுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் இப்போது SBI நமஸ்தே சேவை மூலம் UK கணக்கை திறப்பதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கணக்கு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான புதிய சேவைகளை அளிப்பதில் தொடர்ந்து ஈடுபாடு செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது SBI வாடிக்கையாளர்கள் யோனோ SBI ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி UK கணக்கை திறக்க புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து யுனைடெட் கிங்டம் (UK) நாடுகளுக்கு குடியேற திட்டமிட்டுள்ள SBI வாடிக்கையாளர்கள் அந்த நாட்டிலும் தனது வங்கி சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் இவ்வகை சலுகைகளை கொடுத்துள்ளது.

ஆவின் காலிப்பணியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வு – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

இது தொடர்பாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள SBI வங்கி நிர்வாகம், ‘யோனா SBI மொபைல் செயலியின் மூலம் SBI UK நமஸ்தே வங்கிக் கணக்கைத் திறந்து, இந்தியாவிற்கு பணப்பரிமாற்றத்திற்கான நன்மைகளைப் பெறுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. இது தவிர SBI யோனோ செயலி UK மொபைல் பயன்பாடு சேமிப்பு கணக்கைத் திறத்தல், இந்தியாவுக்கு பணம் அனுப்புதல், நிலையான வைப்புத் தொகை கணக்கை திறத்தல், பண ISA வை திறத்தல், ஃப்ளெக்ஸி பண ISA வை திறத்தல் மற்றும் நமஸ்தே UK கணக்கை திறத்தல் போன்றவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

தற்போது SBI வங்கியின் நமஸ்தே கணக்கு திறத்தல் தொடர்பான சில வழிகாட்டுதல்களை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் கீழ்,

  • முதலாவது SBI வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பயன்படுத்த வேண்டும்.
  • நமஸ்தே UK கணக்கை வைத்திருப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் சில நன்மைகளை அனுபவிக்க முடியும். அதாவது பிரிட்டனுக்கு வருவதற்கு முன்பு 5000 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,67,484 வரை கணக்கில் வைப்பு வைத்திருக்க வேண்டும்.
  • பின்னர் YONO SBI UK மொபைல் பேங்கிங் சேவைகளை திறக்க வேண்டும்.
    விருப்பமான மாற்று விகிதங்களுடன் இந்தியாவிற்கு இலவசமாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

TN Job “FB  Group” Join Now

  • இலவச சர்வதேச டெபிட் கார்டை உபயோகிக்கலாம்.
  • இங்கிலாந்தில் கணக்கு செயல்பாடு துவங்கியவுடன் டெபாசிட் மற்றும் வித்ட்ரால் செய்ய முடியும்.
  • இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு குடிபெயரும் இந்திய குடிமக்களுக்கு இந்த சேவை நீண்டகால விசாக்களில் மட்டுமே கிடைக்கும்.
  • வாடிக்கையாளர்கள் YONO SBI UK செயலியை Android மற்றும் iOS இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் [email protected] இல் தொடர்பு கொண்டும் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!