தளபதி 65 ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் ரிலீஸ் – ரசிகர்கள் உற்சாகம்! வைரலாகும் வீடியோ!

0
தளபதி 65 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்! வைரலாகும் வீடியோ!
தளபதி 65 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்! வைரலாகும் வீடியோ!
தளபதி 65 ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் ரிலீஸ் – ரசிகர்கள் உற்சாகம்! வைரலாகும் வீடியோ!

இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 பீஸ்ட் படம் தயாராகி வரும் நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதை கண்ட ரசிகர்கள் குஷியில் கொண்டாடி வருகிறார்கள்.

தளபதி 65 அப்டேட்:

உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல கோடி ரசிகர்களை கொண்ட இளைய தளபதி விஜய் தமிழ் சினிமா துறைக்கு 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் தளபதி 65 “பீஸ்ட்” ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புகளையும், பல எதிர்பார்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கணக்கு போட்டு ஜீவாவை அசத்தும் மீனா – புதிய திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!

இதில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் அரபிக் குத்து பாடல் ஒன்று வெளியாகியிருந்தது. பாடல் வெளியேறியபோது ஆரம்பத்தில் என்னடா வசனமே புரியல என ஒரு பக்க தரப்பினர் கமெண்ட் அடிக்க, தளபதி ரசிகர்களோ அரபிக் குத்து பாடலை விழா போன்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து ரசிகர்களை குஷிப் படுத்தும் வகையில் புதிதாக அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, அப்டேட் என்று கூறியது வேறொன்றுமில்லை மக்களின் இளைய தளபதி விஜய் பாடிய பாடல் ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து முழு பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலில் ரசிகர்கள் கண்ணே படும் அளவுக்கு விஜய் வேற லெவல் காஸ்டியூம் அணிந்து மாஸ் காட்டியுள்ளார். பாடலை கேட்ட ரசிகர்கள் குஷியோ குஷி ஆகியுள்ளார்கள். இன்றைய நாள் ட்ரெண்டிங் என்றால் அது இதுதான்!

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!